மதுரையில் நகைச்சுவை மன்றம் – 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் குழந்தைகள் , மாணவர்கள் ,பெண்கள் , பெரியவர்கள், தொகுப்பாளர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் சொன்ன நகைச்சுவைகள் ! – தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

மதுரையில் நகைச்சுவை மன்றம் – 24-ம் ஆண்டுத்
தொடக்க விழாவில் குழந்தைகள் , மாணவர்கள் ,பெண்கள் ,
பெரியவர்கள், தொகுப்பாளர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன்
சொன்ன நகைச்சுவைகள் !
தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
============================
உங்க மகனுக்கு, லட்டுப் போல பொண்ணு பார்த்து
கட்டி வைச்சீங்களே, இப்ப எப்படி இருக்கா ?
பூந்திப் போல குடும்பத்தை உடைத்து மகனை
பிரித்து தனி குடித்தனம்  போய் விட்டாள். ..!
——————————————-
டாக்டர், ;நீங்க கடைசியா எழுதி உள்ள மருந்து
எங்குமே கிடைக்கவில்லை …!
எங்குமே கிடைக்காது .ஏன்னா, அது என் கையெழுத்து..!
——————————————-
டாக்டர், அறுவைச்சிகிச்சை செய்யும் நேரத்தில்
புத்தகம் படிக்கிறீங்களே..?
சிறுநீரகம் எங்கு இருக்கும் என்பது மறந்து போச்சு.
புத்தகத்தில் பார்க்கிறேன்..!
——————————————–
மருத்துவ பேராசிரியர் ;
ஆண் மருத்துவ மாணவர்கள் மட்டும் இருந்த வகுப்பில்
கர்ப்பபையைக்  காட்டி இது என்ன தெரியுதா ? என்றார்.
பலரும் யோசித்தனர் .
மருத்துவ் பேராசிரியர் ; உனக்கும் எனக்கும் இல்லாதது
அது என்ன? என்றார்
ஒரு மாணவன் ; மூளையா ? என்றான் …!!
——————————————-
 –
10000 ரூபாய் 20000  ரூபாய் செலவு செய்து சுற்றினால்
சுற்றுலா என்கின்றனர் .
10 ரூபாய் 20  ரூபாய் செலவு செய்து சுற்றினால்
தண்டச்சோறு என்கின்றனர்..!
——————————————–
டாக்டர், நாளைக்கு நீங்க அறுவைச் சிகிச்சை செய்ய இருந்த
நோயாளி 10 வது மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டார் .
அசச்சோ அவசரப்பட்டு விட்டாரே..!
——————————————-
ஜலதோஷம் ஏன் பிடிக்கிறது ?
மூக்கு மேலே இரண்டு  ஐஸ் ( eyes)  இருக்கு
அதனாலதான் ஜலதோஷம் பிடிக்கிறது..!
—————————————–
கரும்புச்சாறு எடுக்கும் குடும்பத்தார்க்கு மருமகளாகப்
போனது தப்பாப் போச்சு  .
ஏன்?
சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குகின்றனர் .
—————————————-
உங்க குழந்தையின் எடை நாளுக்கு நாள் குறைந்து
வருகிறதே ,உங்க கணவர் எங்க வேலை பார்க்கிறார் .
ரேசன் கடையில், டாக்டர்..!
-.
—————————————-
மேங்கோ( mango )  பிரித்தால் என்ன வரும் ?
man go என்று  வரும் சார்..!
————————————–
மழை மேகம் பிரிந்தால் என்ன வரும் ?
மழை me  come என்று  வரும்..!
————————————-
என் மனைவி பல் விளக்கினால்தான் காப்பி தருவேன்
என்கிறாள் .
அது பரவாயில்லைங்க என்  மனைவி பாத்திரங்கள்
விளக்கினால்தான் காப்பி தருவேன் என்கிறாள்..!
—————————————
24 மணி நேரமும் திறந்து இருக்கும் கடை எது ?
சாக்கடை .!
————————————–
நீங்கள் பாடும் பாடலில்  அரிவாள் ,கத்தி , கம்பு
வருகின்றதே ஏன்?
அரசே நீங்கள்தானே பாடும் பாடலில் பொருள் இருக்க
வேண்டும் என்றீர்கள் ..!
–  .
———————————————
பாலைவனத்தில் காகிதம் கிழிந்தால் ஒட்ட கவலை
வேண்டாம்…!
எப்படி?
ஒட்ட’கம்’ இருக்கின்றதே  !
—————————————
அப்பா மகனிடம் ;நம்ம கிட்ட  இந்த வீடு போக வேறு வீடு
உள்ளது அதை விற்க வேண்டும் .பத்திரிகையில் விளம்பரம்
கொடு என்றார் .
மகன் ‘என்அப்பாவின் சின்ன வீடு விற்பனைக்கு உள்ளது’
என்று விளம்பரம் கொடுத்து விட்டான் ..!
-.
——————————————
சின்ன வீடு என்றால் என்ன   தாத்தா…?
அது எதுக்கு உனக்கு..?
– .
சும்மா தெரிஞ்சு வைத்துக் கொள்ளலாமேன்னு கேட்டேன்..!
– .
தெரியாமல் வைத்துக் கொள்வதுதான் சின்ன வீடு ..!
-.
——————————————
டாக்டர், நோயாளியை கூட்டிட்டு வரலாமா ?
பேஷா, கூட்டிட்டு வாங்க ! தூக்கிட்டுப் போங்க !
—————————————–
சாப்பிட முடியாத பன் எது ?
ரிப்பன்..!
—————————————–
உங்க அப்பா தினமும்  சீனி டப்பாவை ஏன் திறந்து
பார்க்கிறார்  ?
டாக்டர், தினமும்  சுகர் செக் பண்ண சொன்னாராம்..!!
—————————————-
கணவன் ; சாமிகிட்ட என்ன வேண்டினாய்?
மனைவி ; அடுத்த பிறவியிலும் நீங்கதான் எனக்கு
கணவராக வர வேண்டினேன் .
மனைவி ;சாமிகிட்ட நீங்க என்ன வேண்டினீர்கள் .
கணவன் ; எனக்கு அடுத்த பிறவியே இருக்கக் கூடாது
என்று வேண்டினேன் ..!
-.
—————————————
சொர்க்கத்தில் கணவனையும் ,மனைவியையும் பிரித்து
வைத்து இருப்பார்களாமே ..!
-.
அதுனாலதான் அதன் பெயர் சொர்க்கம் என்கின்றனர்..!!
– .
—————————————–
மண்டை  உடையாம இருக்க தலைக்கவசம்
போடுகின்றனர் .
தலைக்கவசம்  உடையாம இருக்க யாரவது
மண்டையைப் போடுறாங்களா !?
—————————————-
உங்க ஊரில் யாரவது பெரிய மனிதர்கள் பிறந்து
இருக்கிறார்களா ?
எங்க ஊரில் யாருமே பெரிய மனிதராகப் பிறப்பதில்லை .
எல்லோரும் குழந்தையாகவே பிறக்கின்றனர்..! .
—————————————
கோழிக்கு முந்திரிப் பருப்புப் போட்டு வளர்த்தாலும்
அது முட்டைதான் போடும் ..!
100 மதிப்பெண் போடாது..!!
– .
————————————–
என் மனைவி மாதிரி யாரும் தொலைக்காட்சித்
தொடர்கள் பார்க்க முடியாது..!
அப்படியா..?
ஆமாம், தொலைக்காட்சியைக் கட்டிப் பிடித்து
அழுதுகிட்டே பார்ப்பாள்..!
– .
————————————-
கிளி ஏன் பச்சையா இருக்கு ?
அது பச்சைக்கிளி , அதுதான்  பச்சையா இருக்கு..!! .
————————————
மருத்துவர் ; ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்து
இருந்தால் இவரைக் காப்பாற்றி இருக்கலாம்..!
– .
வந்தவர் . விபத்து நடந்தே கால் மணி நேரம்தான் ஆகுது..!
– .
——————————————-
ஏன் தண்ணீர் தெளித்து கோலம் போடுகின்றனர்..?
– .
கோலம் போட்டு தண்ணீர் தெளித்தால் கோலம் அழிந்து விடும்..! .
———————————————–
தரகரே, அடக்கமான பெண் வேண்டும்..! .
அப்ப நீங்க சுடுகாட்டுக்குதான் போக வேண்டும்..!
– .
———————————————
 கண் மங்கலாகத் தெரியுது கண்ணாடி போடணுமா ?
 டாக்டர்?
– .
கண்டிப்பா போடணும் நான் மருத்துவர் இல்லை..
காவலர்..!
-.
——————————————
கண் அறுவை சிகிட்சை முடிந்து அந்த நோயாளியிடம்
கேட்டனர் அந்த கார் எண் சொல்லுங்க..?
கார் எங்க இருக்கு டாக்டர்…?
—————————————-
தயாரிப்பாளர் ; வித்தியாசமான கதை இருந்தால்
சொல்லுங்க..!
– .
இயக்குனர் ; ஒரு பேய் செத்து மனிதனாகப் பிறக்கின்றது .
மனித வாழ்க்கை வெறுத்து செத்து திரும்ப பேய் ஆகி விடுகிறது!
– .
தயாரிப்பாளர் ;இப்படி எடுத்தால் மக்கள் நம்புவார்களா ?
இயக்குனர் ;ஒரு ஈ  வந்து  பழி வாங்குவதை நம்பினார்கள்
படம் ஓடியது .இதையும் நம்புவார்கள் படம் ஓடும்..!!
– .
———————————————–
ஆசிரியர் பிரம்பை ஓங்கினார் .அதை மாணவன் பிடித்தான் .
ஆசிரியர் சொன்னார் .இந்தப் பிரம்பைப் பிடித்து இருப்பவன்
முட்டாள் என்றார் .
அதற்கு மாணவன் ; இந்த முனையா  ? அந்த முனையா ?
என்றான்..!
——————————————
நாட்காட்டி கிழிப்பவனைப் பார்த்து நாட்காட்டி கேட்டது .
என்ன செய்து கிழித்து விட்டாய் என்று என்னை கிழிக்கிறாய்..?!
– .
———————————————
அப்பா மகனிடம் பல வேலை சொல்லியும் கேட்காததால்
வெறுத்து .உன்னை பெற்றதற்கு ஒரு எருமையை பெற்று
இருக்கலாம் என்றார் .
மகன் ; எங்க அம்மாவை கட்டாமல் ஒரு எருமையை கட்டி
இருக்க வேண்டும் .!

கருத்துகள்