தந்தி தொலைக்காட்சியில் 20.4.2019 இன்று ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !

தந்தி தொலைக்காட்சியில் 20.4.2019 இன்று ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை நிகழ்ச்சி பற்றி . கவிஞர் இரா .இரவி !
தந்தி தொலைக்காட்சியில் 20.4.2019 இன்று ஒளிபரப்பான "பயணங்கள் முடிவதில்லை "நிகழ்ச்சி பார்த்தேன் .மிக நன்று .பாராட்டுக்கள் .இயந்திர மயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வரும் இக்காலத்தில் .தமிழர்களின் உயர்ந்த பண்பாடான 'விருந்தோம்பல்' பற்றி மிக விரிவாக எடுத்து இயம்பினார் திரு .இறையன்பு அவர்கள் .பாராட்டுக்கள் .
.நமக்குப் பிடித்த உணவை பரிமாறுவதை விட விருந்தினருக்குப் பிடித்த உணவை வழங்குவதே சிறப்பு .என்றும் .தமிழ் அறிஞர் அ.சா. ஞானசம்பந்தன் அவர்கள் ஒரு நூலில் எழுதி இருந்த தகவல் ."காந்தியடிகள் ஜின்னாவிற்கு விருந்து அளித்தபோது ஜின்னாவிற்கு மிகவும் பிடித்த உணவையே வழங்கினார் ".இப்படி பல புதிய தகவல்கள் அறிய முடிந்தது .
தமிழ் இலக்கியமான விவேக சிந்தா மணியில் உள்ள விருந்தோம்பல் பற்றிய பாடல் .புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் விருந்தோம்பல் பற்றிபாடிய பாடல்.
எப்போதும் உண்மையான புன்னகை புரிபவர் தலாய்லாமா என்பது முற்றிலும் உண்மை .
.விருந்தோம்பல் பற்றிய திருக்குறள் .
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
குறள் கூறி விளக்கினார்கள் .
முக மலர்ச்சியுடன் விருந்தோம்பல் செய்ய வேண்டும் .
தானம் என்பது .மிகுதியாக இருக்கும்போது கொடுப்பது என்பதை விட ,குறைவாக இருக்கும்போதும் கொடுப்பதே.நல்ல விளக்கம் .வறுமையிலும் செம்மை நமது பெருமை .
"பட்டர் பால் "என்ற சிறுகதை மிக நன்று .நெகிழ்ச்சியாக இருந்தது. யாருக்காக தியாகம் செய்தோமோ அவர்களே நன்றி மறந்து புறக்கணிக்கும் அவமதிக்கும் அவலத்தை உணர்த்தியது .
செருப்பு தைக்கும் தொழிலாளி பற்றிய கதையும் நன்று .செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பேரம் பேசுகின்றோம் .பெரிய நகைக்கடைகளில் பேரம் பேசுவதில்லை .எளியவர்களிடம் பேசும் பேரத்தை வலியவர்களிடம் பேசுவதில்லை .என்பதை நன்கு உணர்த்தினார்கள் .இனியாவது எளியவர்களிடம் பேரம் பேசாமல் வாங்குவோம் .
காட்சித் தொகுப்பில் சிறு குறைபாடு இருந்தது .செருப்பு தைக்கும் கதையில் மன்னர் நேரில் வந்தார் என்று சொல்லி விட்டு வேறு காட்சிகள் வசனங்கள் வந்தன .பின்னர் கடைசியில் மன்னர் நேரில் வந்தார் என்ற கதை வந்தது .இனி கவனமாக காட்சித் தொகுப்பு செய்திட வேண்டுகிறேன் .
மொத்தத்தில் வித்தியாசமாவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. பாராட்டுக்கள் .அரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை .பல அரிய தகவல்கள் அறிய வாய்ப்பான நிகழ்ச்சி .எல்லா வயதினருக்கும் ஏற்ற நிகழ்ச்சி .குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் தரமான நிகழ்ச்சி .தொடரட்டும். வாழ்த்துக்கள் .

கருத்துகள்