பிணையில் விடாமல் பிணமாக்கி விடுங்கள் !
கவிஞர் இரா .இரவி !
அன்று பொள்ளாச்சி என்றதும் நினைவில் இளநீர்
இன்று பொள்ளாச்சி என்றதும் நினைவில் கயவர்கள் !
பொள்ளாச்சிக்கு அன்பால் புகழ் சேர்த்தோர் உண்டு '
பொள்ளாச்சிக்கு காமத்தால் பலி சேர்த்தனர் பாவிகள் !
நம்பி வந்தவளை நயவஞ்சகம் செய்திட்ட கயவன்
நல்ல காதலுக்கு களங்கம் கற்பித்த காமுகன் !
தூக்குத் தண்டனையில் உடன்பாடு இல்லாதவன்
தூக்குத்தண்டனைக்கு உடன்படுகிறேன் தூக்குங்கள் !
விட்டு வைக்காதீர்கள் மனித மிருங்கங்களை
வேட்டையாடிக் கொல்லுங்கள் உடனடியாக !
பசுவிற்காக தன் மகனின் உயிர் பறித்த பூமி
பாவம் பார்க்காமல் உடன் பிடித்திடுங்கள் !
கதறும் ஒலி கேட்க பதறுது நம் நெஞ்சம்
காமுகர்களுக்கு இரக்கம் என்பதே இல்லை !
விலங்கை விடக் கொடிய மிருங்கங்களை
விட்டுவைக்க வேண்டாம் வெட்டி சாய்த்திடுங்கள் !
கயவர்களைக் காட்டிக் கொடுக்கத் துணிந்த
கன்னிக்கு கோடி நன்றிகள் வாழ்க பல்லாண்டு !
உன்னால் பெண் உலகம் காக்கப் பட்டது
உச்சபட்ச தண்டனையை உடனே வழங்கிடுங்கள் !
பித்தன்கள் அனைவரையும் பிடித்திடுங்கள்
பிணையில் விடாமல் பிணமாக்கி விடுங்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக