ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !  


நோய் நீக்கி 
நலம் தரும் 
சுனை நீர் !

ஏரியாதீர்கள் 
மனமெனும் குளத்தில் 
கவலையெனும் கல்லை !

வெல்பவருக்கு என் வாக்கு 
மனநிலை விடுத்து 
நல்லவரை வெல்ல வையுங்கள் !

சின்ன மீன் போட்டு 
தங்க மீன்  பிடித்தல் 
தேர்தல் !

எல்லாக்கட்சிகளின் கேள்வி 
வேட்பாளர்களிடம் 
எவ்வளவு செலவு செய்வீர்கள் ?

பருவம்   வந்ததும் 
பயிற்றுவிப்பது நல்லது 
பாலியல் கல்வி !

ஒருவரி 
உன்னதம் 
ஆத்திசூடி !

இருவரி 
இனிமை 
திருக்குறள் !

மூன்றுவரி 
முத்தாய்ப்பு 
ஹைக்கூ !

நான்குவரி 
நன்மை 
நாலடியார் !
.
மன்னராட்சியில் மட்டுமல்ல 
மக்களாட்சியில் தொடர்கின்றது 
சுங்கவரி !

குடும்ப ஆட்சி 
குறை சொன்னவர்களிடமும் 
குடும்ப ஆட்சி !

சேர்ந்தால் போற்றுவதும் 
பிரிந்தால் தூற்றுவதும் 
வாடிக்கை அரசியலில் !

இந்தப்பொய் போதும் 
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
தேர்தல் அறிக்கைகள் !

புரிதல் இருந்தால் 
குழப்பம் இல்லை 
நட்பு ,காதல் !

பிறரிடம் எதிர்பார்ப்பதை 
பிறருக்கும் வழங்குங்கள் 
மதிப்பு மரியாதை !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்