மனித நேயம் வளர்ப்போம்! கவிஞர் இரா. இரவி.



மனித நேயம் வளர்ப்போம்! 

கவிஞர் இரா. இரவி.   



****** 

உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை 
உயர்வு தாழ்வு கற்பித்தல் மடமை! 

மனிதனை மனிதனாக மதித்திட வேண்டும் 
மனிதரிடம் வேறுபாடு காட்டுதல் கொடுமை! 

கணினியுகத்திலும் தீண்டாமை இன்னும் நீடிப்பது 
காந்தியடிகளுக்கு செய்திடும் அவமரியாதை அறியுங்கள்! 

இன்னும் இரண்டு சுடுகாடு இருப்பது 
எல்லோருக்கும் அவமானம் ஒரு சுடுகாடு ஆக்குவோம்! 

இரட்டைக்குவளை முறை இன்னும் நீடிப்பது 
இதயத்தில் வேல் பாய்ச்சுவது போன்றது! 

சாதி மத பேதம் பார்க்காமல் எல்லோரும் 
சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்! 

தொடக்கத்தில் இல்லை இந்த கொடிய சாதி 
தன்னலவாதிகளால் கற்பிக்கப்பட்ட அநீதி சாதி! 

உழைக்காதவனை உயர்ந்தவன் என்பது தவறு 
உழைப்பவனை தாழ்ந்தவன் என்பது தவறு! 

சாதிவெறி சாகடிக்கும் கொடிநோய் அறிந்திடுக 
சாதிவெறியை மனதிலிருந்து உடன் அகற்றிடுக! 

எல்லோரும் சமம் என்பதை உணர்ந்திடுக 
ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் களைந்திடுக! 

பகுத்தறிவு பெற்றிட்ட மனிதனுக்கு அழகு 
பண்பாடு காத்து பிறரை மதித்திடுக! 

மனிதனின் மனம் நோகாமல் மதித்திடுக 
மனிதநேயம் மனதில் இருந்தால்தான் மனிதன்... 
.

கருத்துகள்