மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு . தொலைக்காட்சி விளம்பரமா? தமிழைக்கொல் கொலைக்கரமா? கவிஞர் இரா. இரவி.மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த  தலைப்பு .


தொலைக்காட்சி விளம்பரமா?
தமிழைக்கொல் கொலைக்கரமா?
கவிஞர் இரா. இரவி.
******
தொலைக்காட்சி இன்று தொலைக்காட்சியாகி விட்டது
தமிழ்க்கொலையை நாள்தோறும் நிகழ்த்தி வருகின்றது !

தமிங்கிலத்தை தமிழரிடையே பரப்பி வருகின்றது
தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து வருகின்றது !

பத்துச் சொல்லில் எட்டுச்சொல் ஆங்கிலம் கலந்து
பைந்தமிழை தினமும் சிதைத்து வருகின்றது !

முதன்மையானது சிறப்பானது என்று சொல்லாமல்
முட்டாள்தனமாக பர்சுட்டு பேசுட்டு  என்கின்றனர் !

ஆங்கிலம் கலந்து விளம்பரம் செய்பவர்களை
அனைவரும் முடிவெடுத்து தவிர்த்து விடுவோம் !

இங்கிலாந்துக்காரன் தமிழ் கலந்து பேசுவானா?
இங்குள்ள மூடத்தமிழன்தான் தமிங்கிலம் பேசுகின்றான்! 

எல்லா வளமும் உள்ளமொழி நம் தமிழ்மொழி
ஏன் பிச்சை எடுக்க வேண்டும் பிறமொழியில் !

மொழிக் கலப்படம் செய்வதை குற்றமாக்கித் தண்டிப்போம்
மொழிப்பற்று உடன் வரவேண்டும் தமிழர்களுக்கு !

தமிங்கிலத்தை இப்படியே தொடர விட்டால் தமிழா
தமிழ் அழிந்து விடும் என்பதை உணர்ந்திடு! 

தமிங்கிலம் பேசுவது பெருமையெனக் கருதிடும்
தமிழர்கள் தலையில் இனி கொட்டு வைப்போம் !

தரணியின் முதல்மொழியான தமிழ்மொழியின்
தரத்தை தமிழர்கள் கட்டிக் காத்திடுவோம் !

தமிழர்கள் யாரும் விரும்பவில்லை தமிங்கிலத்தை
தொலைக்காட்சி விளம்பரமா? தமிழைக்கொல் கொலைக்கரமா?


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்