நூல் விமர்சனம் ------------------------- நூல் : ஹைக்கூ 500 ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை கவிஞர் முனைவர் காவல் உதவி ஆணையர் ஆ .மணிவண்ணன்


நூல் விமர்சனம்
-------------------------
நூல் : ஹைக்கூ 500
ஆசிரியர்: ஹைக்கூத் திலகம் கவிஞர் இரா.இரவி.
மதிப்புரை கவிஞர்  முனைவர் காவல் உதவி ஆணையர் 
ஆ .மணிவண்ணன் 

வெளியீடு: புகழ்பெற்ற வானதி பதிப்பகம்,  23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. 
பக்கம் : 132.விலை: நூறு ரூபாய் மட்டும்.


மதுரை வடக்கு மாசி வீதி இலக்கிய உலகில் பல அறிஞர்களைத் தந்த பூமி.அதன் புகழைத் தொடர்ந்து தக்க வைப்பவர் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
நம் தமிழக அரசின் மாவட்ட உதவி சுற்றுலா அலுவலராக மதுரை வானூர்தி நிலையத்தில் பணியாற்றி வருகின்றார்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் தமிழ்த் தேனீஇரா. மோகன் அவர்களின் இலக்கிய கல்லூரியில் எனக்கு முன்பே சேர்ந்து பயின்று வருபவர்.
உலக அளவில் பல தமிழ் இலக்கியவாதிகளுடன் அமைதியான, தொடர்ச்சியான தொடர்பில் உள்ளவர்.
பலன் எதிர்பாராது தமிழுக்கு பணியாற்றும் பெருந்தகை
மேலும் இவரது புகழ் வரலாறுகள் பல உள்ளன.
அரசுப் பணி நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் தமிழ் இலக்கியதற்காக உழைப்பவர்.
ஈரோட்டுச் சிங்கத்தின் கொள்கைகளை ஏற்று இன்று வரை மௌனமாய் கடைபிடிக்கும் உண்மைத் தொண்டர்.
எளிய கவிதைகள் படைப்பதும் இலக்கிய விழாக்களில் பங்கேற்று தமிழை சுவைப்பதையும் தனது இரண்டாம் மூச்சாகக் கொண்டவர்.
இந்நூல் கவிஞரது 19 ஆவது நூல்.
மனதில் தோன்றும் கவிதைகளை வடித்து பின்னர் தலைப்பிடும் கவிஞர்கள் ஒரு ரகம்,கருப் பொருளைப் பெற்று அதனுள் தனது கற்பனை வளத்தை இணைத்து கவிதைகளை தருவது மற்றொரு ரகம்.
இரண்டாவதாக கூறியுள்ள வகையில் கவிதைகளை இயற்ற புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் தேர்ந்தெடுத்து தந்த நூறு புகைப்படங்களைக் கண்டு அவை ஒவ்வொன்றிற்கும் ஐந்து விதமாக சிந்தித்து வடித்த ஐந்து கவிதைகள் விதம் ஐநூறு கவிதைகள் அடங்கிய கவிதைகளை இயற்றி தொகுத்த நூலே இந்நூல்.
ஏற்கனவே 18 நூல்களை வெளியிட்டவர் எனினும் அவற்றில் இல்லாதவற்றை புதிதாக வடித்தது சிறப்பு.
இந்நூலில் அந்தப் படங்கள் கவிதைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
பேராசிரியர் அய்யா இரா.மோகன் மற்றும் தமிழ்நெஞ்சன் ஆகியோரின் அணிந்துரைகள் இந்நூலுக்கு மேலும் அணி சேர்க்கின்றன.
கவிதைகளில் ஒரு எடுத்துக் காட்டாக,
புகைப்படத்தில் குடைக்கு கீழே உள்ள இணையரை
" ஊடல் தகர்த்து
காதலரை இணைக்கும்
குடை."
வாசகர்கள் நூலினை வாங்கி படித்து அவரது கவித்திறனை மேலும் அறிய வாழ்த்துக்கள்
கவிஞரை வாழ்த்த தொலைபேசி எண்
98421 93103.
கவிஞரின் தமிழ்ப் பணித் தொடர வாழ்த்தி மகிழ்கின்றேன்.நன்றி.வணக்கம்


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்