மதிப்பிற்குரிய பெண்மை!
கவிஞர் இரா. இரவி.
******
மிகவும் மேன்மையானது உயர்ந்த பெண்மை
மதிப்பு மிக்கது போற்ற வேண்டியது உண்மை!
ஒரு இல்லம் அழகாகக் காரணம் பெண்மை
ஒரு உள்ளம் மகிழ்வாகக் காரணம் பெண்மை!
பெண்ணடிமைத்தனம் மண் மூடிப் போக வேண்டும்
பெண் உரிமை எப்போதும் வழங்கிட வேண்டும்!
பெண்மையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்
பெண்ணை போகப்பொருளாக பார்க்காதிருக்க வேண்டும்!
பெண் இல்லாத உலகத்தை கற்பனையில் பாருங்கள்
பெண்ணின்றி ஆண் மட்டும் இருந்தால் அழகன்று!
அறிவுரை வழங்குவாள் நல்வழிப்படுத்தி மகிழ்வாள்
அறிவில் சிறந்த பெண்மையைப் பாராட்டுவோம்!
சொல்ல வரும் கருத்திற்கு செவிமடுக்க வேண்டும்
சொல்வதில் நல்லது இருந்தால் ஏற்றிட வேண்டும்!
பெண் புத்தி பின் புத்தி என்பது மூடர் சொன்னது
பெண் புத்தி முன் முத்தி என்பதே உண்மையானது!
ஆறை நூறாக ஆக்குவது சேமிக்கும் பெண்மை
அன்பை அள்ளி வழங்குவது அற்புதமான பெண்மை!
பாசம் வைத்து நேசம் காட்டுவது பெண்மை
பண்பில் சிறந்து பண்பை கற்பிக்கும் பெண்மை!
பாரதியார் உயர்ந்து வியந்து பாடியது பெண்மை
பாரதிதாசன் முழங்கியது எழுதியது உயர்ந்த பெண்மை!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாராட்டியது பெண்மை
பார் முழுவதும் கொடிகட்டிப் பறப்பது பெண்மை!
பெண்ணிடம் எப்போதும் குறை காண வேண்டாம்
பெண்ணிடம் உள்ள நிறையை எப்போதும் காணுங்கள் !
பெண்மையை மதிப்பதில்தான் ஆண்மை உள்ளது
பெண்மையைப் போற்றுவதில் தான் அர்த்தம் உள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக