ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.
ஹைக்கூ!

கவிஞர் இரா. இரவி.

நியாயமானது
சின்னத்தம்பி யானையின்
சினம்!

விரைவாக காதல்
விரைவாக திருமணம்
விரைவாக மணவிலக்கு!

காடுகளை அழித்தால்
கொண்டது கோபம்
சின்னத்தம்பி யானை!

ஒரே ராசிக்கு
வேறு வேறு பலன்கள்
சோதிடர்கள்!

சிரிப்பு வந்தது
சுவரொட்டி பார்த்து
வருங்கால முதல்வரே!

நம்பவில்லை
கிரகங்களின் ஆதிக்கத்தை
கலாம்!

தைப்பது இல்லை
அறுந்ததும் மாற்றி விடுகின்றனர்
செருப்பு!

உண்மை தான்
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
சோதிடர்!

வளர்ச்சிக்குத் தடை
எப்போதும் வேண்டாம்
எதிர்மறை எண்ணம்!

எங்கும் போகட்டும்
ராகும் கேதும்
நீ கவனமாக இரு!

நிராகரிக்கப்படுகிறார்
பணமற்ற நல்லவர்
வேட்பாளர் தேர்வில்!

ஏழரை சனி
என்பது கற்பனை
வேண்டாஅம் கவலை!

காட்டை அழித்ததால்
நாட்டை அழிக்க வந்தது
யானை!

கூட்டக் கூட்ட
வந்தது குப்பை
அரசியல்!

தற்கொலைக்கு
காரணியாகின்றனர்
இரக்கமற்ற சில காவலர்கள்!


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்