ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
நங்கைகளை மிஞ்சிடும்
பேரழகியாக
சில திருநங்கைகள் !
தொடர்ந்து வா ! தொட்டு விடாதே !
இடித்தால் துட்டு இல்லை !
தானியில் வாசகம் ! (AUTO )
எங்கும் நிற்கும்
எப்போதும் கவனம்
தானி வண்டி ! (AUTO )
கூழானாலும் குளித்துக் குடி
சரி குளித்து விட்டனர்
கூழ் ?
வாய்ப்பந்தல்
வறுமையை ஒழிப்பதாக
அரசியல்வாதிகள் !
தேனும் பாலும் ஓட வேண்டாம்
தண்ணீரை ஓட விடுங்கள்
ஆற்றில் !
தடுத்தால்
நடக்குது கொலை
மணல் கொள்ளை !
யாருக்கும் இல்லை வாக்கு
எண்ணிக்கைக்கும் கீழ்
தேசியக்கட்சி ?
இருக்கும் கெட்டவர்களில்
குறைந்தபட்ச கெட்டவர் தேர்வு
தேர்தலில் !
நல்லவர்கள் மறைந்து
நாளாகிவிட்டது
அரசியல் !
கருத்துகள்
கருத்துரையிடுக