பெண்ணே!
கவிஞர் இரா. இரவி.
நீ இல்லாத உலகம்
வெறுமையானது
பெண்ணே!
உணர்ந்திடு
பேராசை பெருநட்டம்
பெண்ணே!
இந்த உலகம்
இனிமையானது
உன்னால் பெண்ணே!
பெரிதல்ல பணம்
பெரிது குணம்
பெண்ணே!
புரியாத புதிர்
புரிந்தால் அமுதம்
பெண்ணே!
பலவீனமானவள் அல்ல
பலமானவள் நீ
பெண்ணே!
வாய்ப்பு வழங்கினால்
வையகம் ஆள்வாய்
பெண்ணே!
நினைத்ததை முடிக்கும்
ஆற்றல் பெற்றவள்
பெண்ணே!
அன்றே சொன்னார் பெரியார்
பிள்ளை பெறும் இயந்திரமல்ல
பெண்ணே!
பின்புத்தி அல்ல
முன்புத்தியே உண்மை
பெண்ணே!
பொன்னகை அழகன்று
புன்னகையே அழகு
பெண்னே!
விட்டுவிடு அடுப்பறை
வசமாகும் விண்வெளி
பெண்ணே!
அறிந்திடு
அடிமை அல்ல
பெண்ணே!
புதுமைகள் புரிந்ததும்
புரட்சிகள் புரிவதும்
பெண்ணே!
கருத்துகள்
கருத்துரையிடுக