தமிழும் நானும்!
கவிஞர் இரா. இரவி.
******
தமிழும் நானும் நகையும் சதையும் போல
தமிழ் குருதியில் ஒன்றாகக் கலந்திட்ட உறவு!
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வேன்
துக்கம் விரட்டிடும் ஆற்றலுண்டு தமிழுக்கு !
தமிழ் படித்தவர்களுக்கு வாழ்நாள் நீளும்
தமிழுக்கு வாழ்விக்கும் திறமை உண்டு!
தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்
தரணியின் முதல்மொழி எந்தன் தாய்மொழி!
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நமது
அண்ணால் தமிழனாகப் பிறக்க விரும்பினார் !
மாவீரர் நேதாசியும் அடுத்தபிறவி இருந்தால்
மண்ணில் தமிழனாகப் பிறக்க விரும்பினார்!
தமிழின் அருமை பெருமை தரணி அறிந்தது
தமிழன்தான் பெருமையை அறியாமல் இருக்கிறான் !
அரசுப்பள்ளியில் பயின்றதால் எனக்கு தமிழ்ப்பற்று உள்ளது
ஆங்கிலப்பள்ளியில் பயின்று இருந்தால் தமிழ்ப்பற்று இருக்காது!
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் புரட்சிக்கவிஞர்
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்பேன் நான் !
அமுதம் வேண்டுமா? தமிழ் வேண்டுமா? என்றால்
அமுதம் வேண்டாம் தமிழ் வேண்டும் என்பேன் !
பெற்ற தாய்க்கு அடுத்து நேசிப்பதை தமிழை
பெற்ற தாய் தடுத்தாலும் தமிழ்ப்பகையை விடுவதில்லை !
தமிழுக்காக எழுதியும் பேசியும் வருகிறேன்
தமிழுக்காக தேவைஎன்றால் உயிரையும் தருவேன் !
தமிழன்னையை அரியணையில் ஏற்றி மகிழ்வேன்
தமிழே எந்தன் உயிர் மூச்சு என்பேன்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
கருத்துகள்
கருத்துரையிடுக