ஹைக்கூ உலா நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா




ஹைக்கூ உலா
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.comபக்கம் : 120, விலை : ரூ. 80.
******
ஹைக்கூவின் பிறப்பிடம் ஜப்பான் என்றாலும் அது சீனாவில் வேரூன்றி நிலைத்தது. பௌத்தம் செல்வாக்குடைய சீனத்தில் ஹைக்கூ ஊடுருவியது. ஜப்பானியக் கவிஞர் பாஷோ ஹைக்கூவின் ஆதிகவி என்பர்.

ஹைக்கூ திலகம் கவிஞர் இரா. இரவி அவர்களின் 17ஆவது நூல் ‘ஹைக்கூ உலா’ நூல். ஹைக்கூ கவிதைகளின் கூகுள் கவிஞர். பல்வேறு விருதுகளை பெற்றவர். இலக்கிய ஈடுபாடு மட்டுமின்றி தற்போது திரைப்படங்களுக்கும் திரை விமர்சனம் எழுதி வருகின்றார். (அய்யா அவர்கள் என் கவிதைகளுக்கு குரு) (கவிஞர் இரா. இரவி அவர்கள் வித்தகக் கவிஞர் பா. விஜய், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் நண்பர்). இன்றைய இயந்திரமயமான சூழலில் புதுக்கவிதைகளை விட தாம் கூற வந்த கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைக்கூ! கவி ஞரின் இந்நூலுக்கு பேராசிரியர் இரா. மோகன் அவர்களும், முதன்மைச் செயலர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களும் அணிந்துரை வழங்கி உள்ளனர். நூலுக்கு நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். (இந்நூல் 

புதுவையில் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் நடத்திய ‘ஹைக்கூ நூல்’ போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் இந்நூல் மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தின் துளிப்பா படைப்பாளர் விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). இந்நூலின் உள்ளடக்கம் 29 பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது

.   தன்னம்பிக்கை முனை ஹைக்கூ பகுதியில் கவிஞர், “தேடி வராது, தேடிச்செல் வாய்ப்பு” என்று இன்றைய போட்டி மிகுந்த உலகில் இளையதலைமுறையினருக்கான விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் விதைக்கின்றார். இயற்கை பற்றி கவிஞர் இயற்கை, மரங்கள், மலர்கள், பறவைகள் முதலிய தலைப்புகளில் எடுத்துரைக்கின்றார்.

 நம் சங்ககால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர். இயற்கை பற்றி கவிஞர் எடுத்துரைக்கும் போது “மழை கடல் மேகம் தொடர்பயணம் இயற்கை” என்று தம் ஹைக்கூவில் எடுத்துரைக்கின்றார். இன்றைய சூழலில் சமூக சீர்கேடுகள் மிகுந்து வருகின்றன. இதை சாடும் விதமாக கவிஞர் “மகிழ்ச்சி” என்று தொடங்கி துன்பத்தில் முடியும் மது! என்று கூறுகின்றார். நம் தொன்மொழியான தமிழைப் பற்றி எடுத்துரைக்கும் போது “உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ்!”, “மூலமொழி உலகமொழி ஆங்கிலத்திற்கும் தமிழ்மொழி!” என்று மொழிப் பெருமை பற்றி கவிஞர் எடுத்துரைக்கின்றார்.  குழந்தையும் முதல் ஆசான் தாய். இதை நூல் “முதல் ஆசான் தாய்மொழி கற்பித்த்தவள் அம்மா” என்று எடுத்துரைக்கின்றது.

இறுதியாக நூலின் உதிரிப்பூக்கள் பகுதியில் பன்முகப் பார்வையாக கவிஞர் பல்வேறு நிகழ்வுகளை தம் ஹைகூவாக எடுத்துரைக்கின்றார். ‘ஹைக்கூ உலா’ என்ற தலைப்பே பல்வேறு கருத்துக்களை வாசகரின்  உள்ளத்தில் உலாவாக வலம் வரச் செய்கின்றது.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்