மேலும் உயர்ந்தார் காந்தியடிகள்!
கவிஞர் இரா. இரவி.
******
காந்தியடிகளைக் கொன்ற கூட்டம் இன்றும்
காந்தி படத்தை சுட்டு மகிழ்கின்றது மூடர் கூட்டம்!
காந்தி படத்தை சுட்டு மகிழ்கின்றது மூடர் கூட்டம்!
தேசப்பிதாவின் புகழை அழிக்க முடியாது
தேசமெங்கும் பொங்கி எழுந்து உள்ளது!
தேசமெங்கும் பொங்கி எழுந்து உள்ளது!
மதவெறிக்காக ரத்தம் சிந்தியவர் மகாத்மா
மாதிரி ரத்தம் சிந்தி மகிழ்ந்தனர் முட்டாள்கள்!
மாதிரி ரத்தம் சிந்தி மகிழ்ந்தனர் முட்டாள்கள்!
சூரியனின் ஒளியை சும்பர்களால் மறக்க முடியாது
அறிவுச் சூரியன் அகிலம் போற்றும் காந்தியடிகள்!
அறிவுச் சூரியன் அகிலம் போற்றும் காந்தியடிகள்!
காந்தியடிகளின் அஞ்சல்தலை உலகம் முழுவதும்
காந்தியடிகளின் சிலை இன்று உலகம் முழுவதும் !
காந்தியடிகளின் சிலை இன்று உலகம் முழுவதும் !
கோட்சேயை நீங்கள் கொண்டாடக் கொண்டாட
காந்தியடிகளின் புகழ் உயர்ந்து கொண்டே இருக்கும்!
காந்தியடிகளின் புகழ் உயர்ந்து கொண்டே இருக்கும்!
அண்ணலை மறந்தவர்களுக்கு நினைவூட்டியது
அண்மையில் கோட்சே கும்பலின் ஒளிப்படம்!
அண்மையில் கோட்சே கும்பலின் ஒளிப்படம்!
மதவெறியர்களின் உண்மை முகம் தெரிந்தது
மடையர்களின் முட்டாள்தனம் நன்கு புரிந்தது!
மடையர்களின் முட்டாள்தனம் நன்கு புரிந்தது!
கொடியவன் கோட்சேயை வாழ்கவென்று கோசமிட்டனர்
கொடியவர்களின் கூடாரம் என்பதை மெய்பித்தனர்!
கொடியவர்களின் கூடாரம் என்பதை மெய்பித்தனர்!
ஒப்பற்ற மாமனிதர் காந்தியடிகளை மூடர் நீங்கள்
ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியவே முடியாது !
காந்தியடிகளுக்கு களங்கம் கற்பிக்கும் கயவர்களை
கூண்டோடு கைது செய்து சிறைப்படுத்துங்கள்!
கூண்டோடு கைது செய்து சிறைப்படுத்துங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக