தமிழ்ப் புத்தாண்டு சபதம் ! கவிஞர் இரா .இரவி !
தமிங்கில உரைக்கு முடிவு கட்டுவோம்
தமிழை தமிழாகவே என்றும் பேசிடுவோம் !
சாதி மத வெறியினைச் சாகடிப்போம்
சகோதர உணர்வினைப் பெற்றிடுவோம் !
ஆணவக் கொலைகளை ஒழித்திடுவோம்
அன்பால் அனைவரையும் ஆட்கொள்வோம் !
பெண்களுக்கு சம உரிமை வழங்கிடுவோம்
பெண்மையின் கருத்துக்கு மதிப்பளிப்போம் !
உழவர்கள் உள்ளம் மகிழ வைப்போம்
ஒருவரையும் சாக விடாமல் காப்போம் !
ஏற்றத் தாழ்வு இல்லாத சமநிலை வேண்டும்
எல்லோருக்கும் உரிய வாய்ப்பு வழங்கிடுவோம் !
சக மனிதனை மனிதனாக மதித்திடுவோம்
சண்டைகளுக்கு உடன் முடிவு கட்டுவோம் !
ஊழல் எதிலும் இல்லாத நிலை வரவேண்டும்
உண்மையானவர்கள் தலைமைக்கு வேண்டும் !
விலைவாசி கட்டுக்குள் வர வேண்டும்
வாழ்க்கை வசந்தமாக மாற வேண்டும் !
வறட்சி ஏழ்மை ஒழிய வேண்டும்
வளமும் நலமும் பெருக வேண்டும் !
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக