ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அகிலம் போற்றும்
அறுவடைத் திருநாள்
பொங்கல் !

இயற்கையை மதிக்கும்
இனிய நன்னாள்
பொங்கல் !

தமிழரின் வீரத்தை
தரணிக்கு பறைசாற்றும்
பொங்கல் !

உலகத்தமிழரை
ஒருங்கிணைக்கும் நாள்
பொங்கல் !

உணர்வீர் 
உழவு நலிய
உணவு நலியும் !

இயற்கை உரம் விடுத்து
செயற்கை  உரம் பயன்படுத்த
பெருகியது நோய்கள் !

உழவனின் உள்ளம்
மகிழ்ந்தால்
உலகம் மகிழும் !

சான் ஏற
முழம் வழுக்குது
உழவனின்  வாழ்வு !

வள்ளுவர் வழிமொழித்த
உயர் தொழில்
உழவுத்தொழில் !

குடும்பத்தில்
ஒருவரானது
வளர்ப்பு நாய் !

இழந்தவற்றைப் பெறலாம்
இழக்காதீர்
தன்னம்பிக்கை !

பல்லாயிரம் மைல்கள்
பறக்கும் பறவை
மனிதன் ?

கரம் சிரம் புறம் நீட்டாதீர்
படித்து விட்டு நீட்டினர்
படித்தவர்கள் ?

தலைக்குத்தான்
வாகனத்திற்கு அல்ல
தலைக்கவசம் !

அலைபேசி பேசியபடி
வண்டி ஓட்டுதல்
விரைவாக்கும் இறப்பை !

செய்யலாம் உடல்தானம்
செய்ய முடியாது
மூளை தானம் !

அழிந்துவிட்டது 
நேர்மை நாணயம்
அரசியலில் !

கூட இருந்து குழி பறிப்பது
வாடிக்கை
அரசியலில் !

சுமையன்று
பாதுகாப்பு
ஆமையின் கூடு !

குழந்தை அளவோடு பெற்றும்
வளமாக வாழ முடியவில்லை
மக்கள் !

வண்ண வேறுபாடு
எண்ணத்தில் வேண்டாம்
வேண்டும் சமநிலை !

வெள்ளை உயர்வு
கருப்பு தாழ்வு
எண்ணம் அழி ! 

கருத்துகள்