ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி.




ஹைக்கூ!   கவிஞர் இரா. இரவி.
******
அதிகம் பனி
அதிகம் வெயில்
மார்கழி நீ கழி!

அரசுப்பள்ளிகளில்
அங்கும் கதை முடித்தனர்
தமிழ்வழிக்கல்வி!

எங்கும் இல்லை
மாமியார் மெச்சும்
மருமகள்!

அழித்து வருகின்றனர்
ஆங்கில மோகத்தில்
அருந்தமிழை!

அறிவித்து ரத்தானதில்
வருத்தத்தில் மக்கள்
இடைத்தேர்தல்!

பாலில் கலந்த நஞ்சாக
பைந்தமிழில் கலந்தன
ஆங்கிலச் சொற்கள்!

அனைத்துத் தொகுதியிலும்
மக்களின் எதிர்பார்ப்பு
இடைத்தேர்தல்!

உறுதி ஏற்போம்
தமிழர்கள்
தமிழை தமிழாக பேசிட!

கொள்கைகளை விட
கோடிகளே தீர்மானிக்கின்றன
தேர்தலில் வெற்றியை!

முதல்மொழிக்காரன்
தமிழன்
முன்மொழிகிறான் ஆங்கிலம் !

கேலிக்கூத்தில்
ஒன்றானது
தேர்தல்!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்று முழங்கிய நாட்டில்
ஆங்கில வழிக்கல்வி!

அறிந்திடுங்கள்
அப்துல் கலாமின்
ஆரம்பக்கல்வி தமிழ்!

மயில்சாமி அண்ணாதுரை
முதலில் பயின்றது
தமிழ்!

கருத்துகள்