ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.






ஹைக்கூ 500 ...

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 132, விலை : ரூ. 100


******

சுறுசுறுப்புத் தேனீ, உற்சாக எறும்பு, சொற்சுவைக் கரும்பு, பொன்மனப் போராளி கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், இணையவல மேதை – இரா.இரவி அவர்கள், நலம், வளம், புகழ் மிகுத்தே வாழியவே.

ஹைக்கூ 500 என்ற தங்களது புதிய நூல் படித்து மகிழ்ந்தேன். படத்துக்கு ஐந்தென 500 புனைந்து அசத்தி உள்ளீர்கள்.

ஊடல் தகர்த்து
காதலரை இணைக்கும்
குடை!

வாசித்து நேசித்தேன். இந்த ஹைக்கூவை பிப்ரவரி பொதிகை மின்னல் மூவரி முற்றத்திலும் வைத்துவிட்டேன்.

சாட்டையின் தீண்டல்
வரும் வரை அமைதியாக
பம்பரம்!

காலம் வரும்போது நீதி பிரளயமாகி வெடிக்கும் என்பதை மறைமுகமுகமாகச் சொல்லும் வித்தை!

குயவன் வாழ்வில்
மண் போட்டது
உலகமயம்.

என்னே கைநேர்த்தி! அற்புதம்!!

வயலுக்குள் வீடு
வாசலில் தவமிருக்கும்
தென்றல் !

என்ன இயற்கை வர்ணனை காட்சிமயம்.

வீட்டுக்கொரு
மரம் வளர்ப்பது
அறம்!

புதிய ஆத்திச்சூடி ஹைக்கூவானதோ!

வெற்றிகள் சூழ வியந்தே பாராட்டுகிறேன்.
 நன்றி! வாழ்க! வளர்க! வெல்க.

கருத்துகள்