மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு நெகிழிகளால் நிலம் கெடுமே! கிரந்தெழுத்தால் தமிழ் கெடுமே!! கவிஞர் இரா. இரவி.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு
நெகிழிகளால் நிலம் கெடுமே!
கிரந்தெழுத்தால் தமிழ் கெடுமே!!
கவிஞர் இரா. இரவி.
******
நெகிழி மண்ணை மலடாக்கிக் கெடுக்கும்
கிரந்த எழுத்து தமிழின் சீரைக் குலைக்கும்!
நெகிழி உண்டு விலங்குகள் மடிந்துவிடும்
கிரந்த எழுத்தால் நல்தமிழ் நலிந்து விடும்!
உண்ணும் உணவில் நஞ்சு கலக்கலாமா?
உன்னதத் தமிழில் கிரந்தம் கலக்கலாமா?
நெகிழியில் சூடானவை கலக்க புற்றுநோய் வரும்
நம்தமிழில் கிரந்தம் கலக்க கேடு வரும்!
நெகிழி வேண்டாம் மஞ்சப்பை வேண்டும்
கிரந்தம் வேண்டாம் காந்தத்தமிழ் போதும்!
நெகிழிக் குப்பை மண்ணில் மக்காது
கிரந்தம் கலந்து பேசினால் மக்காவாய்!
நெகிழி அழித்தது நிம்மதியான வாழ்வை
கிரந்தம் அழித்தது தூயதமிழ்ப் பேச்சை!
திட்டமிட்டால் ஒழித்து விடலாம் நெகிழியை
திட்டமிட்டால் ஒழித்து விடலாம் கிரந்தத்தை!
வருங்கால தலைமுறைக்கும் நஞ்சு நெகிழி
வருங்கால தலைமுறைக்கும் நஞ்சு கிரந்தம்!
ஒழிப்போம் ஒழிப்போம் நெகிழியை ஒழிப்போம்
ஒழிப்போம் ஒழிப்போம் கிரந்த எழுத்தை ஒழிப்போம்!
நெகிழியின் பயன்பாட்டால் நெழிந்தது சமுதாயம்
கிரந்தெழுத்து பயன்பாட்டால் தமிழுக்கும் சிறுமை!
உடலுக்கு புற்றுநோய் தரும் நெகிழி நீக்கு
உலகின் முதல்மொழியில் கலப்படம் தீங்கு!
விழிப்புணர்வு வேண்டும்! நெகிழி வேண்டாம்!!
விழிப்புணர்வு வேண்டும்! கிரந்தம் வேண்டாம்!!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக