ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ  ! கவிஞர் இரா .இரவி !

சிலமணி நேரத்தில் 
சிதைந்தது வாழ்க்கை 
கசாப்புயல் !

உணர்த்தியது 
வாழ்வின் நிலையாமையை 
புயல் !

பெயர் சூட்டுவது இருக்கட்டும் 
வரும்முன் அறிவியுங்கள் 
புயலை !

காற்றின் 
கோரத்தாண்டவம் 
புயல் !

குறை தீர்க்கும் நாள் 
கூட்டம்  கூட்டம்
குறை தீர்ந்தபாடில்லை !

தாங்கமுடியவில்லை 
தமிழக மீனவர்களுக்கு
இலங்கையின் இடையூறு !

காற்றால் நகர்ந்தால்
கைது செய்யும் 
இலங்கைப்படை !

கணினியுகத்தில் 
தூக்கிலிடுங்கள்
தூக்குத் தண்டனையை !

தந்தது முன்னேற்றம் 
பெண்கள் வாழ்வில் 
சுயஉதவிக்குழு !

உருகி விடுகின்றன 
ஐஸ் கட்டியாக 
அரசின் திட்டங்கள் !

கட்டித்தருவோம் வீடு சரி 
அதுவரை எங்கு வாழ்வது 
சோகத்தில் மக்கள் !

வேதனையில் சாகிறான் 
மரம் வைத்தவன் 
சாய்த்தது புயல் !

நிகழ்ந்தது தோல்வி 
நெகிழி ஒழிப்பில் 
ஒத்துழைக்காத மக்கள் !

எடுத்துச் செல்லுங்கள் 
கேவலமல்ல 
துணிப்பை !

நடிகர்கள் கோடிகள் ஈட்ட
ரசிகர்கள் செலவழிப்பு
பணம் !

குப்பையோடு நாற்றமும் 
சிந்தியபடி சென்றது 
குப்பைவண்டி !

மூடநம்பிக்கை பரப்பும்
மூடர்கள்  நிறைந்துள்ளனர் 
தொ(ல்)லைக்காட்சியில் !

காரணியாகின்றன 
விபத்துக்கு 
வேகத்தடைகள் !

ஓய்ந்தது அலை 
சுருங்கியது தாமரை 
தேர்தல் முடிவு !

பண மதிப்பு இழப்பால் 
இழந்தனர் மதிப்பை 
தேர்தலில் !

கூட்டினர் வரியை 
குறைத்தனர் தொகுதியை 
மக்கள் !

மாட்டுக்காக மனிதனை
கொன்றவர்களை  
தண்டித்தனர் மக்கள் !

பயன்படுத்தாவிட்டால் 
துரு பிடிக்கும் இரும்பும் 
மூளையும் !

எதிர்பார்ப்பு அதிகரிக்க 
மிஞ்சுவது 
ஏமாற்றம் !

தாவுவதில் 
வென்றனர் குரங்கை 
அரசியல்வாதிகள் !

உடன்பிறந்த நோயானது 
ஊழல் 
அரசியல்வாதிகளுக்கு !

இவருக்கு அவரே தேவலாம் 
என்றாக்கி விடுகின்றனர் 
வருவோர்

கருத்துகள்