தினமணி கவிதைமணி தந்த தலைப்பு
வனவாசம் ! கவிஞர் இரா .இரவி !
வனவாசம் விரும்புகின்றது என் மனம்
வனத்தில் சுவாசம் எங்கும் நல்ல வாசம் !
நாட்டில் வாழும் மனித மிருங்கங்களை விட
காட்டில் வாழும் மிருங்கங்கள் கொடியதன்று !
பசுத்தோல் போர்த்திய புலிகள் பெருகிவிட்டன
பண்பாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டன !
வனத்தில் சாதிமதச் சண்டைகள் இல்லை
வனத்தில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை !
உண்ணும் உணவிற்கு பஞ்சம் இல்லை
ஒருவரும் பொல்லாங்கு பேசுவது இல்லை !
விலங்குகளுடன் நட்பாக வாழலாம்
பறவைகளுடன் நன்கு பழகி மகிழலாம் !
செயற்கை உணவுகள் அங்கு இல்லை
சிதைக்கும் நோய்களும் வருவதில்லை
கோடிகள் கொள்ளையடிக்கும் கூட்டம் இல்லை
கேடிகளின் அடாவடி அங்கு இல்லை !
தொல்லைதரும் தொலைக்காட்சி இல்லை
துன்பங்கள் துயரங்கள் அங்கு இல்லை !
வரப்புச்சண்டைகள் அங்கு இல்லை
வாய்க்கால் சண்டைகள் அங்கு இல்லை !
பெட்ரோல் அங்கு தேவையே இல்லை
பெரும் தொல்லை இல்லவே இல்லை !
மாசுக்காற்று காட்டில் இல்லவே இல்லை
மக்காத குப்பைகளும் அங்கு இல்லை !
வனவாசத்திற்கு யாரும் வருந்த வேண்டாம்
வனவாசம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக