நாட்குறிப்பு எழுதிய நாட்கள் ! கவிஞர் இரா .இரவி !




நாட்குறிப்பு எழுதிய நாட்கள் ! கவிஞர் இரா .இரவி !

நாட்குறிப்பு எழுதிய நாட்கள் மிகவும் குறைவு 
நாட்களில் மகிழ்வானவற்றை குறித்து வைத்தேன் !

தினமும் எழுத வேண்டும் என்ற ஆவலில் 
தன்னம்பிக்கையுடன் தொடங்கினேன் !

சோம்பேறித்தனத்தில் எழுதவில்லை தினமும் 
சோம்பலே காரணமானது எழுதாதற்கு !

அடுத்த வருடம் முதல் தினமும் எழுதுவேன் 
அடுத்த அடுத்த சபதம் கடைபிடிக்கவில்லை !

ஒவ்வொரு வருடமும் எழுதாமல்  கழிந்தது 
ஒரு வருடமாவது தினமும் எழுதிட வேண்டும் !
 
நாட்குறிப்பு தினமும் எழுதுவது நல்லது 
நாடறிந்த அறிஞர்கள் பலர் தினமும் எழுதுவர் !

நினைவாற்றல் இல்லாதவர்களுக்கு என்றும் 
நினைவூட்ட துணை நிற்கும் நாட்குறிப்பு !

மறக்க கூடாதவற்றை நினைவூட்டும் 
மறதி நோய் தீர்க்கும் மருந்தாகும் !

.

கருத்துகள்