ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ !   கவிஞர் இரா .இரவி !

குடியில் ஆரம்பித்து 
குடியில் முடிகிறது 
குடிகாரர்களின் தீபாவளி !

போதும் சிலை வைத்தது 
போக்குங்கள் 
வறுமையை ! 

வேகம் விவேகமென்று 
நூறில் சென்றவன் 
நூற்றி எட்டில் செல்கிறான் !

ஏறும்போது ரூபாயில் 
இறங்கும்போது பைசாவில் 
பெட்ரோல் விலை ! 

நியாயம் பேசும் நடிகரின் 
திரைப்படக் கட்டணம் 
மூன்று மடங்கு !

.

கருத்துகள்