ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி  !

எந்தப் புயலும்
எதுவும் செய்யாது
எங்க மதுரையை !

கலை நகரம் மதுரை
கொலை நகரமானது
திரைப்படங்களால் !

சிலை திறப்பதில்
காட்டும் போட்டியை
காட்டுங்கள் சீர்திருத்தத்தில் !

புத்த மதத்தவருக்கு
பேராசை
இலங்கையில் !

வழிபடுவதை விட
வழி நடப்பது நன்று 
புத்தரை !

எப்போதாவது
தோற்கிறது
அநியாயம் !

மெய்ப்பித்து
பேராசை பெருநட்டம்
இலங்கை வாக்கெடுப்பு ! 

தரைமட்டமானது
தமிழினப் பகைவனின் நப்பாசை
இலங்கையில் !

தூக்குத்தண்டனை
பெறவேண்டியவனுக்கு
மீண்டும் அரியணை ஆசை !

கருத்துகள்