கவிச்சுவை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : முனைவர் இ.கி. ராமசாமி,




கவிச்சுவை!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி!

நூல் விமர்சனம் : முனைவர் இ.கி. ராமசாமி,
 எம்.ஏ., பிஎச்.டி., டி.ஆர்.டி.,
மேனாள் தலைவர், தமிழ் உயராய்வு மையம், யாதவர் கல்லூரி, மதுரை-625 014.
‘மலரகம்
, 3/191, கவிமணி தெரு, பேங்க் காலனி, நாராயணபுரம், மதுரை-625 014.  அலைபேசி : 98420 08954, தொலைபேசி : 0452 2680606  

பக்கம் 186.விலை ரூபாய் 120.வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769
மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.com

******
தூது அஞ்சலில் இன்று பறந்து வந்தது கவிஞர் 
இரா. இரவியின் கவிச்சுவை! 78 கவிதைகளில் எம் நெஞ்சைக் குத்திக் கிழித்தது ஒரு கவிதை.  அது அவசரப்பட்டு விட்டாய் அனிதா!

கனவு காண்பவர் எல்லாம் கவிதை எழுத முடியாது ;
      கால் இருப்பவர் எல்லாம் நடக்கலாம், ஆனால்
      கை இருப்பவர் எல்லாம் கவிதை எழுத முடியாது,
      கவிதை படைக்கத் தனி ஆற்றல் தேவை.

அந்தப் படைப்பாற்றல் கவிஞர் இரவியிடம் மேலோங்கி விளங்குகின்றது. சமகால கொடுமைகளை நம் மனக்கண்முன் நிறுத்தி விடுகின்றன!

அவசரப்பட்டு விட்டாய் அனிதா! மெரினா புரட்சி ஆகிய இரண்டில் முன்னது சமூக நீதிப் போராட்டத்தின் தோல்வியைக் காட்டுகின்றது!  பின்னது தமிழன் பண்பாட்டை மீட்டெடுத்த வெற்றியைக் குறிக்கின்றது.  அதனை விட இன்றைய இளைஞரின் எழுச்சியோடு கூடிய கட்டுப்பாட்டைக் காட்டுகின்றது.

அனிதா +2 தேர்வில் மதிப்பெண்களைக் குவித்தாள்.  நீட் தேர்விலும் முயன்றாள் ; நீதிமன்றங்களில் மன்றாடினாள் ; அரசுகள் விலக்கு வரும் வரும் என்று  ஏமாற்றின.  தட்டிய கதவுகள் எல்லாம் திறக்கவில்லை.  போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்ட அவளுக்கு உயிர்மீது இருந்த ஆசை போய்விட்டது; அவள் கோழையல்ல, போராளி, இப்போது அவள் படமாகவா இருக்கின்றாள்! இல்லை, பாடமாக இருக்கின்றாள்! இல்லை, பாடமாக இருக்கின்றாள்.

சல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டிய  தமிழர்படை,  முழுவதும் நீட்டை நோக்கிப் பாயவில்லையே ஏன்? அது கேள்விக்குறியாகவே நிற்கின்றது.

அனிதா தற்கொலை குறித்த இரவியின் இரங்கற்பா, காலத்தின் கண்ணாடி.

நம் நெஞ்சை உறைய வைக்கும் கொடுமையான நிகழ்வு பற்றிய சித்தரிப்பு.  இரவியின் படைப்பாற்றலைச் சொல்லும் அந்தக் கவிதை காலத்தால் அழியாது.



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்