பால்ய வீதியில் ! கவிஞர் இரா .இரவி !



பால்ய வீதியில் ! கவிஞர் இரா .இரவி !

ஆண் பெண் பேதமின்றி இருபாலரும் 
அன்று அழகாக சிரித்து மகிழ்ந்தோம் !

காக்கா கடி கடித்து  மிட்டாய் பகிர்ந்தோம் 
கள்ளம்  கபடமின்றி விளையாடினோம் !
.
சாதி மதம் அறியாது எல்லோரும் 
சகோதரர்களாய் பழகி மகிழ்ந்தோம் !

பண்டிகை உணவுகளைத் தந்தோம் 
பாசத்துடன் பழகி வந்தோம் !

கவலை என்றால் அறியாத காலம் 
களிப்புடன் கொண்டாடிய காலம் !

மணலில் வீடு கட்டி மகிழ்ந்தோம் 
மனதில் கோட்டை கட்டி வாழ்ந்தோம் !

கபடி விளையாடிய காலம் உண்டு 
கிட்டிப்பில் விளையாடிய காலம் உண்டு !

காலையில் சண்டை என்றால் உடன் 
மாலையில் சமாதானம் ஆயிடுவோம் !

நொங்கு பதநீர் குடித்து மகிழ்ந்தோம் 
நொங்கு வண்டி உருட்டி விளையாடினோம் !

டயர் வண்டி ஒட்டி மகிழ்ந்தோம் 
போடி வாடி பேசி மகிழ்ந்தோம் !
 
அலைபேசியில் விளையாட்டு இன்று 
அறைக்குள்ளே விளையாட்டு இன்று !

அது  ஒரு நிலாக் காலம் உண்மை 
அந்தோ போனதே திரும்ப வராதே !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்