மன்னிப்பாயா ? கவிஞர் இரா .இரவி !
.குற்றம் செய்யாமல் வாழ்ந்து இருந்தால் தலை
குனிந்து மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை !
முடிந்தளவு தவறு இன்றி நேர்மையாக
மனசாட்சிப்படி என்றும் வாழ வேண்டும் !
பிறர் தன்னிடம் எப்படி நடக்க எதிர்ப்பார்க்கிறோமோ
பிறரிடம் நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் !
மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் கூடாது
மற்றவரை பேசாதிருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டாம் !
உன்னைப் போலவே பிறரையும் நேசித்தால்
ஒருபோதும் குற்றம் செய்திட மாட்டாய் !
அவசரப்பட்டு கடும் சொல் பயன்படுத்தாதே
அன்பால் இன்சொல் என்றும் பேசுக !
யாரையுமே எப்போதும் தாழ்வாக எண்ணாதே
யாவரும் சமம் என்ற எண்ணம் வேண்டும் !
நானே பெரியவன் என்ற எண்ணம் தகர்த்திடு
நானே சிறியவன் என்று எண்ணுவதும் தவறு !
கர்வம் வந்தால் காணாமல் போவாய்
கனிவு இருந்தால் உயரம் செல்வாய் !
மன்னிப்பு கேட்க அவசியம் வர வேண்டாம்
மனதளவில் நல்லவனாகவே வாழ்ந்திடு !
கருத்துகள்
கருத்துரையிடுக