மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு . கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே! கவிஞர் இரா. இரவி.
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி
சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு .
கட்டமைப்புத் தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே!
கவிஞர் இரா. இரவி.
உலகில் தமிழ்மொழியென ஒரு மொழி இல்லை
உலக மொழிகளின் தாய்மொழி மட்டுமல்ல தனிமொழி !
ஓர் எழுத்துக்கு பல பொருள் உள்ள மொழி
ஓர் எழுத்து மாறினால் பொருள் மாறிடும் மொழி !
தனிச்சிறப்பு மிக்க மொழி தன்னிகரில்லா மொழி
தனக்கென தனிப்பெருமைகள் கொண்ட மொழி !
தொல்காப்பியம் தொடங்கி இலக்கணங்கள் உள்ள மொழி
தொன்மைக்கும் தொன்மையான தமிழ் மொழி!
தரணி அறிந்த மொழி தரணி போற்றும் மொழி
தமிழறிஞர்களின் அறிவை வளர்க்கும் மொழி!
உலகப்பொதுமறையால் உலகப்புகழ் பெற்றிட்ட மொழி
உலகமே வியந்து போற்றிடும் உன்னத மொழி !
ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி
இனிக்கும் பேசப் பேச இனித்திடும் மொழி!
பன்மொழி அறிஞன் பாரதி போற்றிய மொழி
பன்மொழி ஆய்வாளர்கள் கூறிடும் முதல்மொழி!
தேவநேயப் பாவாணர் உரைத்திட்ட முதல்மொழி
தேசமெங்கும் பரவி எங்கும் ஒலிக்கும் மொழி!
பன்னாட்டு மொழி நம் பண்டைத் தமிழ்மொழி
பண்பாட்டை உலகிற்கு உணர்த்திடும் மொழி!
எல்லா வளங்களும் உள்ள வண்டமிழ் மொழி
ஏன் கடன் வாங்க வேண்டும் பிற மொழிகளிடம்!
இல்லாதவன் பிச்சை எடுக்கலாம வேறு வழியில்லை
இருப்பவன் எதற்கடா பிச்சை எடுக்க வேண்டும்!
கட்டமைப்பு தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே
கண்டபடி ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசாதே!
கருத்துகள்
கருத்துரையிடுக