சொற்கள் ! கவிஞர் இரா .இரவி !


சொற்கள் ! கவிஞர் இரா .இரவி !

ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்
உண்மைதான் கவனமாகப் பேசுவோம் !

நல்லது பேசிட நல்லதே நடக்கும்
நாளும் இன்சொல்லே பேசிடுவோம் !

யாருக்கும் சாபம் இட  வேண்டாம்   
யார் மனதையும் புண் படுத்த வேண்டாம் !

தீக்காயம் ஆறி விடும் சில நாளில் 
சொல்காயம் ஆறாது சொன்னவர் வள்ளுவர் !

கனி போன்ற இனிமை  சொற்கள் இருக்க 
காய் போன்ற வன்சொல் எதற்கு என்றார் !

இனிமையாகப் பேசினால் உங்களை உடன் 
எல்லோருக்கும் பிடிக்கும் உணர்ந்திடுங்கள் !

உங்களிடம் மற்றவர் எப்படி பேச வேண்டுமென 
உங்கள் மனம் விரும்புகிறதோ அப்படியே பேசுங்கள் !

சொர்களால் யாரையும் காயப் படுத்த வேண்டாம் 
சோகத்தில் ஆழ்த்தி சுகம் காண வேண்டாம் !

.அன்பாகப் பேசுங்கள் அனைவருக்கும் பிடிக்கும்
ஆணவப் பேச்சு ஒருபோதும் வேண்டாம் !  

மலர் போன்ற இன் சொற்கள் இருக்கையில்  
முள் போன்ற வன் சொற்கள் எதற்கு ?
--

.
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்