காதலின் வானிலை ! கவிஞர் இரா .இரவி !




காதலின் வானிலை !  கவிஞர் இரா .இரவி !

காதலின் வானிலை எப்போதும் முழுநிலவுதான்
காதல் உணர்வு சொல்லில் அடங்காது !

காதலித்துப் பாருங்கள் வானில் பறக்கலாம்
காதலி கண்ணிலும் உள்ளத்திலும் இருப்பாள் ! 

இன்பரசம் எப்போதும் இருப்பாக இருக்கும்
இனிய நினைவுகள் அலைஅலையாய் வரும் !

காதல் மூன்று எழுத்து மோக மந்திரம்
கனிச்சாறாக இனித்திடும் இன்ப நினைவு !

சிறகுகள் இன்றி வானில் பறக்கலாம்
சிந்தனையில் மூழ்கி முத்து எடுக்கலாம் !

உண்மையான காதலை உடன் அங்கிகரியுங்கள்
உலகில் ஒழிய வேண்டும் ஆணவக்  கொலைகள் !

காதலித்ததற்காக  கொல்வதை உடன் நிறுத்துங்கள் 
காதலை ஏற்கும் மனநிலை பெற்றிடுங்கள் !

பிள்ளைகள் காதலித்தால் பெற்றோர்கள் தற்கொலை
படித்துப் பார்த்தல் புரிந்திடும் மடமைகள் !

சாதி மதம் பார்ப்பதை  உடன் நிறுத்துங்கள்
சந்தோசமாக பிள்ளைகளை வாழ்ந்திடவையுங்கள் !

காதலித்து   மணமுடித்தால் வாழ்க்கை இனிக்கும்
காதலுக்குப் பச்சைக்  கொடியைக் காட்டுங்கள்  !

ஊர் என்ன நினைக்கும் என்பதை விட்டுவிட்டு
உங்கள் குழந்தைகள் மகிழ்ந்திட இணைத்திடுங்கள் !

ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய காதல்
அகிலம் உள்ளவரை தொடரும் காதல் உணருங்கள் !

காதலின் வானிலே சிறகடித்துப் பறக்கட்டும்
காதலை ரசித்து வாழ்ந்து மகிழுங்கள் !

கருத்துகள்