தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !




தற்புகழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !

இருக்கட்டும் மனதில் 
வேண்டாம் உதட்டில் 
தற்புகழ்ச்சி !

சொல்பவருக்கு மகிழ்ச்சி 
கேட்பவர்களுக்கு எரிச்சல் 
தற்புகழ்ச்சி !

பூனையை 
யானையாக்கும் 
தற்புகழ்ச்சி !

கர்வத்தின் 
வெளிப்பாடு 
தற்புகழ்ச்சி !

ஆணவத்திற்கும் அழிவிற்கும் 
வழிவகுக்கும் 
தற்புகழ்ச்சி !

தன்னடக்கம் தகர்க்கும் 
திமிரை வளர்க்கும் 
தற்புகழ்ச்சி !

மதிப்பதில்லை யாரும் 
தன்புகழ் பேசுவோரை 
தற்புகழ்ச்சி ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்