பொதிகை மின்னல் மாத இதழ்
தந்த தலைப்பு !
சூழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !
இராமாயணத்தில்
வந்த மாயமான்
சூழ்ச்சி !
சகுனி கூனி
புராணத்தில் புரிந்தது
சூழ்ச்சி !
வஞ்சகர்கள்
விரித்தாடும் வலை
சூழ்ச்சி !
யதார்த்தமானவர்களை
வீழ்த்திடும் மாயக்குழி
சூழ்ச்சி !
திட்டமிட்டு கவிழ்க்கும்
கபட நாடகம்
சூழ்ச்சி !
அறியாமல் வீழ்ந்துவிட்டு
அல்லல்பட வைப்பது
சூழ்ச்சி !
சூத்து வாது மிக்கோரின்
கொடுஞ்செயல்
சூழ்ச்சி !
எட்டப்பன்களுக்கு
கை வந்த கலை
சூழ்ச்சி !
நல்லவர்கள் அறியாதது
கெட்டவர்கள் அறிந்தது
சூழ்ச்சி !
வீழ்ச்சிக்கும்
வழிவகுக்கும்
சூழ்ச்சி !
இராசதந்திரம் என்ற
புனைப்பெயர் உண்டு
சூழ்ச்சி !
அரசியல்வாதிகளின்
மூலதனம்
சூழ்ச்சி !
கருத்துகள்
கருத்துரையிடுக