கவிஞர் இரா. இரவி



கவிஞர் இரா. இரவி

******

பிறப்பு : சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை வடக்குமாசி வீதி.

அப்பா: வீ. இராமகிருட்டிணன்,    அம்மா : சரோசினி

தம்பி : கண்ணபிரான்,                   தங்கை : கலையரசி

மனைவி : ஜெயச்சித்ரா,           மகன்கள்: பிரபாகரன், கௌதம்.

மகாகவி பாரதியார் ஆசிரியராக வேலை பார்த்த வரலாற்று சிறப்புமிக்க சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தார். 10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்து பின்னர் வெற்றி பெற்று 11ஆம் வகுப்பு இடம் கேட்டபோது மறுக்க, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 11, 12 வகுப்புகள் படித்தார்.

11ஆம் வகுப்பு இடம் தர மறுத்த சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறை பள்ளி மாணவர்களுக்கு நடத்திய கவிதைப் போட்டிக்கு நடுவராக இருந்தார்.  தான் படித்த சேதுபதி மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு 100 நூல்கள் அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.

மதுரை காமராசர் பலகலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வியில் பி.காம் வணிகவியல் பயின்றார்.  குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்குச் சென்று படிக்க இயலவில்லை. கல்லூரி வாழ்க்கை இல்லாமல் போன வருத்தம் இருந்தாலும் .கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்ளிலும் கவிஞர்  இரா. இரவி எழுதிய ஹைக்கூ கவிதைகள் பாடநூலில் இடம்பெற்றுள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மூன்றிலும் கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ கவிதைகள் பாடமாக உள்ளன.  தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி, விருதுநகர் வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, திருச்சி புனித செஞ்சிலுவை பெண்கள் கல்லூரியிலும் பாடநூலில் கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

(1) கவிதைச்சாரல் 1997,           (2) ஹைக்கூ கவிதைகள் 1998,
(3) விழிகளில் ஹைக்கூ 2003,     (4) உள்ளத்தில் ஹைக்கூ 2004,
(5) நெஞ்சத்தில் ஹைக்கூ 2005,   (6) என்னவள் 2005,
(7) இதயத்தில் ஹைக்கூ 2007,     (8) கவிதை அல்ல விதை 2007,
(9) மனதில் ஹைக்கூ 2010,        (10) ஹைக்கூ ஆற்றுப்படை 2010
(11) சுட்டும் விழி 2011             (12) ஆயிரம் ஹைக்கூ 2013
(13) புத்தகம் போற்றுதும் 2014     (14) கவியமுதம் 2014
(15) ஹைக்கூ முதற்றே உலகு 2015     (16) வெளிச்சவிதைகள் 2016
(17) ஹைக்கூ உலா 2017          (18) கவிச்சுவை 2018

ஆகிய மேற்குறிப்பிட்ட 18 நூல்கள் எழுதி உள்ளார்.  ஆயிரம் ஹைக்கூ தொடங்கி கவிச்சுவை வரை 7 நூல்கள் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.  தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் செ.கி. சங்கீத் இராதா அவர்கள் கவிஞர் இரா. இரவியின் 15 நூல்களை ஆய்வு செய்து வரலாறு நூல் வடித்துள்ளார்.  இந்நூலை அண்ணாமலை பல்கலைக்-கழகமும் ,மலாய் பலகலைக்கழகமும், கலைஞன் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ளன.  ஆயிரம் ஹைக்கூ நூல் 3 பதிப்புகள் விற்று தீர்ந்து விட்டன.

தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களை நடுவராகக் கொண்டு விழிப்புணர்வு பட்டிமன்றங்களில் உரையாற்றி வருகிறார்.  கவிமாமணி சி.வீரபாண்டிய தென்னவர் தலைமையில் கவியரங்குகளில் கவிதை பாடி வருகிறார்.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலராக மதுரை விமான நிலையம் சுற்றுலா தகவல் மையத்தில் பணியாற்றி வருகிறார்.  26.01.1992 அன்று நடந்த குடியரசுதின விழாவில் மதுரை மாவட்ட அன்றைய ஆட்சித் தலைவர் திருமதி கிரிசா  வைத்தியநாதன் அவர்களிடமிருந்து ‘சிறந்த அரசுப்பணியாளர்’ விருது பெற்றார்.  அரசுப்பணியுடன் சேர்த்து இலக்கியப் பணியும் செய்து வருகிறார்.

ஐந்து ஆண்டுகள் திரு .திருச்சி  சந்தர் .திரு.ராசராசன் ஆகியோருடன் இணைந்து தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலராக இருந்து மாதாமாதம் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தி தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார்.

புதுவை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் புதுவை துணைவேந்தர் அவர்களிடமிருந்து சிறந்த நூலிற்கான பரிசு பெற்றுள்ளார்.

கவிச்சிங்கம், கவியருவி, ஹைக்கூ திலகம், கவிச்சூரியன் என பல்வேறு விருதுகள், பல்வேறு இலக்கிய அமைப்புகள் வழங்கி பாராட்டி உள்ளன.

இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம், உலக அளவில் நடத்திய இரண்டு கவிதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டுவிழாவில் கலைமாமணி கு. ஞானசம்பந்தன், நடிகர் சார்லி ஆகியோரிடமிருந்து ‘வளரும் கலைஞர்’ விருது பெற்றுள்ளார்.

கணித்தமிழ்ச் சங்கம் நடத்திய கணிப்பொறித் திருவிழாவில் ஆண்டோ பீட்டர் அவர்களிடமிருந்து கவிதைப் போட்டியில் வென்ற பரிசினைப் பெற்றுள்ளார்.

டில்லியிலிருந்து வெளிவந்த' மக்கள் காப்பரிமை ' காவல் உயர் அலுவலர் திரு. பொன்னையன் அவர்கள் நடத்திவந்த மாத இதழ் சார்பாக நடந்த கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றார். இந்த பரிசளிப்பு விழா புதுவையில் நடந்தது.

மனிதநேயம் மாத இதழ், மனிதநேய அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவில் ‘மனிதநேய படைப்பாளி’ விருதை மேனாள் சட்டமன்றத் தலைவர் காளிமுத்து அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருந்த போதும் ஓய்வின்றி உழைத்து வருகிறார். முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் கூற்றான “இயங்கிக் கொண்டே இரு” என்பதை தாரகமந்திரமாகக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருகின்றார்.

தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் கவிஞர் இரா. இரவிக்கு குருவாக இருந்து வானதி பதிப்பகத்தை அறிமுகம் செய்து வைத்து தொடர்ந்து நூல்கள் வெளிவருவதற்கு உதவி வருகின்றார்.

27-09-2014ல் ஈடில்லாக கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80ஆவது பிறந்த நாள் விழா கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து நடத்திய சென்னை விழாவில் ‘எழுத்தோலை’ விருதை தமிழறிஞர் சிலம்பொற் செல்லப்பனார் வழங்கினார்.

கவிமலர் டாட் காம்  www.kavimalar.com  என்ற இணையத்தை
04-11-2003 அன்று தொடங்கி 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.  பல இலட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.  இந்த இணையத்தில் ஹைக்கூ கவிதைகள் உலகின் முதல்மொழி தமிழ், உலகமொழி ஆங்கிலம், வட இந்திய மொழி இந்தி என மூன்று மொழிகளிலும் பதிப்பித்து உள்ளார். புதக்கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், இலக்கிய நிகழ்வு புகைப்படங்கள், நகைச்சுவை துணுக்குகள், விருந்தினர் கருத்து பதிவிடும் பக்கம் என பல்வேறு பகுதிகள் இணையத்தில் உள்ளன.

உலகின் புகழ்பெற்ற தமிழ் இணையங்கள் யாவும் கவிமலர் டாட் காம் இணையத்திற்கு  இலவச இணைப்பு வழங்கி உள்ளன.  கூகுள் தேடுதளத்தில் கவிதைகள் என்று தேடினாலே கவிமலர் டாட் காம் இணையம் வந்து நிற்கும்.  இந்த இணையத்தின் காரணமாக எல்லா வெளிநாட்டிலும் கவிதை ரசிகர்கள், நண்பர்கள் கிடைத்துள்ளனர்.  கவிஞர் இரா. இரவி அரசுப்பணி காரணமாக இதுவரை எந்த வெளிநாட்டிற்கும் சென்றதில்லை.  ஆனால் எல்லா வெளிநாடுகளிலும் நண்பர்கள் உண்டு.

கவிதை உறவு மாத இதழின் சார்பில் இணையப் பணியினைப் பாராட்டி சென்னை விழாவில் ‘கலைமாமணி விக்ரமன்’ விருது வழங்கினார்கள்.

கவிதை உறவு மாத இதழ் மாநில அளவில் நடத்திய கவிதை நூல் போட்டியில் கவிஞர் இரா. இரவி எழுதிய 'கவியமுதம்' நூலிற்கு இரண்டாம் பரிசு வழங்கினார்கள்.

அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள பல்கலைக்கழகம் கவிஞர் இரா. இரவியின் இலக்கியப் பணியினைப் பாராட்டி, ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தது.  இதற்கான விழா மதுரையில் நடைபெற்றது.  வித்தகக் கவிஞர் பா. விஜய் வருகைதந்து சிறப்பித்தார்கள்.

கவிஞர் இரா.இரவியின் நேர்முகம், பொதிகை, கலைஞர், செயா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.  இந்த நேர்முகங்களை தமிழஆகர்ஸ் டாட் காம் இணையத்தில் ஆவணப்படுத்தி உள்ளனர். எப்போதும் யாரும் எங்கும் கண்டுகளிக்கலாம்.

 சன் தொலைக்காட்சியில் திருமலை நாயக்கர் அரண்மனையின் வரலாற்ற்றை எடுத்தியம்பி உள்ளார்.  ராச் தொலைக்காட்சியில் வித்தகக் கவிஞர் பா.விஜய் நடத்திய அகடவிகடம் நிகழ்ச்சியில் முனைவர் ஞா. சந்திரன் அவர்களுடன் இணைந்து சிறப்புரையாற்றினா.  இணையத்தில் காணலாம்.

குமுதம் புதுத்தகம் பகுதியில் இவரது கவிதை பிரசுரமானது.  குங்குமம் நடத்திய ஹைக்கூ போட்டியில் இவரது ஹைக்கூ கவிதை மேற்கோளாகக் காட்டப்பட்ட்து. எழுத்துவேந்தர் இந்திரா சௌந்திரராஜன் அவர்கள் தனது நாவலில் முன்னுரையாக கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ கவிதையை மேற்கோளாகக் காட்டி உள்ளார்.

மனிதநேயம், பொதிகை மின்னல், கவிதை உறவு, புதுகைத் தென்றல், ஏழைதாசன், புதிய உறவு,  இனிய நந்தவனம், மகாகவி, ஆச்சி வந்தாச்சு உள்ளிட்ட பல்வேறு சிற்றிதழ்களில் எழுதி வருகிறார்.உலகப் புகழ் தமிழ் ஆதர்சு  டாட் காமில் www.tamilauthors.com தொடர்ந்து எழுதி வருகிறார்

தினமணி, கவிதைமணி இணையம் வாராவாரம் தரும் தலைப்புக்கு கவிதை எழுதி வருகிறார்.  தொடர்ந்து இணையத்தில் பிரசுரமாகி வருகின்றது.  அக்கவிதைகளைத் தொகுத்து ‘கவிச்சுவை’ என்ற நூலாக்கி உள்ளார்.

சிவகாசி காளீசுவரி கல்லூரி மாணவர் திரு. எம். பாலகணேஷ், ஆயிரம் ஹைக்கூ பன்முகப் பார்வை என்ற தலைப்பில் ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார். பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் மாணவர் ச.முத்துவேல், ‘ஹைக்கூ கவிதைகளில் காணலாகும் வாழ்வியல் கூறுகள்’ என்ற தலைப்பில் கவிஞர் இரா. இரவியின் கவிதைகளை ஆய்வுசெய்து ஆய்வேடு சமர்ப்பித்துள்ளார்.

மேலூர் அரசுக்கல்லூரி மாணவர் உள்ளிட்ட பலரும் கவிஞர் இரா. இரவியின் கவிதைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் திட்டத்திற்காக திரு. சுரேசு ஆய்வு செய்து வருகிறார்.மதுரை மாணவி செய பிரியங்கா மாவு செய்து வருகிறார் .

08-10-2017 அன்று சிவகாசியில் கந்தகப்பூக்கள், நீல நிலா இதழ் இணைந்து நடத்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் ‘ஹைக்கூ செம்மல்’ விருது வழங்கினார்கள்.

15-10-2017 அன்று புதுவையில் மூவடி மின்மினி துளிப்பா இதழ் இணைந்து நட்த்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் ‘துளிப்பாச் சுடர்’ விருதை பேராசிரியர் மித்ரா பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோர் வழங்கினார்கள்.

கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய ஹைக்கூ கவிதை நூல் போட்டியில் 'ஹைக்கூ உலா 'நூல் சிறப்புப் பரிசு பெற்றது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்ட கவிஞர் இரா. இரவி தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் பணி, இலக்கியப் பணி இரண்டையும் இரண்டு விழிகளாகக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருகின்றார். 

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தரமணி சென்னையில் நடந்த பாரதி விழாவில் கவிஞர் இரா.இரவிக்கு அமைச்சர் பாண்டியராசன் அவர்கள் 'பாரதி' விருது வழங்கி பாராட்டினார்.  விருது, பரிசு, பாராட்டு பல பெற்றபோதும் நான் மிக எளியவன், பாமரன் என்றே சொல்லி வருகிறார்.  தலைக்கனம் இல்லாத பண்பாளராக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்.


தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் சாகித்ய அகதமி சார்பில் தொகுத்த ஹைக்கூ நூலில் கவிஞர் இரா .இரவி எழுதிய பாத்து ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன .    கவிஞர் இரா .இரவி எழுதிய பத்து நூல்களுக்கு ,தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய அணிந்துரைகள் தொகுத்து,' இரா .இரவி படைப்புலகம் ' என்ற நூல் வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது .

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .சேது இராமச்சந்திரன் அவர்களிடம் ரூபாய்  4,000 மதிப்புள்ள தனது நூல்களை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார் .

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரைக்கு வழங்கிய நூல்கள் 101.
இரண்டாம் முறையாக 100 நூல்கள்  நன்கொடையாக வழங்கி உள்ளார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் முனைவர்
கா .மு .சேகர் அவர்கள் பாராட்டி மடல் வழங்கி உள்ளார்  இரண்டு முறை மொத்தம்  201. நூல்களை உலகத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு  நன்கொடையாக வழங்கி உள்ளார் .

தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு கவிஞர்
இரா .இரவி நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிய தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி தனது நூல்களையும் ,தான் மதிப்புரை எழுதிய நூல்களையும் மொத்தம் 240 நூல்களை நன்கொடையாக கல்லூரியின் பாதுகாப்பு அலுவலர் திரு,மகேஷ்வரன் அவர்களிடம் வழங்கினார் .

தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி வலாற்று சிறப்பு மிக்க கல்லூரி. கவிக்கோ அப்துல் இரகுமான், கவியரசர் மேத்தா ,தமிழ்த் தேனீ இரா .மோகன் உள்ளிட்ட பல அறிஞர்கள் ,கவிஞர்கள், சான்றோர்கள் படித்த கல்லூரி . கவிஞர் இரா .இரவியின் மூத்த மகன் பிரபாகரன் B.C.A படித்த கல்லூரி. கவிஞர் இரா இரவியின்10 ஹைக்கூ கவிதைகளை பாடத்திட்டத்தில் வைத்த கல்லூரி.பல சிறப்புகள் மிக்க கல்லூரிக்கு வழங்கியதில் மகிழ்ச்சி  என்கிறார் .
வரலாற்று சிறப்பு மிக்க ,நூற்றாண்டு கண்ட அமெரிக்கன் கல்லூரி நூலகத்திற்கு வாசகர்களுக்கு பயன்படும் விதமாக கவிஞர் இரா .இரவி தான் வாசித்த மதிப்புரை எழுதிய170 நூல்களை நன்கொடையாக வழங்கினார் .நூல்கள் வழங்கிட பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள் பேருதவியாக இருந்தார்கள்.
 
தான் வாசித்த நூல்கள், மதிப்புரை எழுதிய நூல்கள் என 100 நூல்களை காந்தியடிகள் அருங்காட்சியகம் நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி நன்கொடையாக வழங்கினார் .

  முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் எழுதிய அச்சம் தவிர் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய கணினி யுகத்திற்கு திருவள்ளுவர்,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்கள் எழுதிய படித்தாலே இனிக்கும் ,முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் அவர்கள் எழுதிய வான் தொட்டில் கவிபாரதி வாசுகி அவர்கள் எழுதிய இவர்களும் இந்நாட்டின் கண்கள் ,கவிஞர் இரா .இரவி எழுதிய கவிதைச்சாரல், என்னவள் ,ஹைக்கூ ஆற்றுப்படை ,சுட்டும் விழி உள்பட ஐம்பது 50 நூல்களை பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு தாமோதரன் அவர்களிடம் கவிஞர் இரா .இரவி நன்கொடையாக வழங்கினார்.

 மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள தாய் பயிற்சி மையத்தின் நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்களான மனதில் ஹைக்கூ ,ஹைக்கூ ஆற்றுப்படை ,புத்தகம் போற்றுதும் , கவியமுதம் மற்றும் கவிதை உறவின் தொகுப்பு நூலான அறிஞர் அண்ணா பற்றிய கவிதை நூலும் நன்கொடையாக இயக்குனர் திரு .மோகனக் கண்ணன் அவர்களிடம் 10 நூல்கள்வழங்கினார் .உடன் மாணவர்கள் உள்ளனர் . 

 சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு பெருமை சேர்க்கும் மதுரைத் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கலை மற்றும் ஓரியண்டல் கல்லூரியில் உள்ள அரிய நூலகத்திற்கு ,கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரேணுகா அவர்களிடம் கவிஞர் இரா .இரவி தனது நூல்களான கவியமுதம் ,புத்தகம் போற்றுதும் ,சுட்டும் விழி நூல்களையும் ஏர்வாடியார் அனுப்பி வைத்த கவிதை உறவு இதழ்களும் ,அண்ணா எங்கள் அண்ணா தொகுப்பு, 10 நூல்களையும், இரண்டாம் முறையாக 50 நூல்கள் நன்கொடையாக வழங்கினார் . 
நூல்களை நன்கொடையாக வழங்கி வாசிப்பு விழிப்புணர்வை விதைத்து   வருகிறார் .மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் .அரசுப்பணி, இலக்கியப்பணி இரண்டையும் இரண்டு கண்களாக நினைத்து இயங்கி  வருகிறார் .

கருத்துகள்