பத்மவியூகம் ! கவிஞர் இரா .இரவி !

பத்மவியூகம் ! கவிஞர் இரா .இரவி !

உள்ளே செல்பவன் உற்று  நோக்கி செல்ல வேண்டும்
உள்ளே செல்லும்  வழியே திரும்பிட வேண்டும் !

வந்த வழி மறந்தால் திரும்பிட முடியாது 
வந்த வழி நினைவில் நிறுத்திட வேண்டும் !

விதி என்று எதுவும் இல்லை உணர்ந்திடுக 
விதி என்பது கட்டுக்கதை என்பதை புரிந்திடுக !

மதியால் வாழ்வதே சிறந்த வாழ்வு 
மதிக்கு இணை வேறு உலகில் இல்லை !

எண்ணம் ஒன்றாக இருந்தால் வழி மறக்காது 
எண்ணம் சிதைந்தால் சிந்தனை சிதறும் !

மனதில் வரும் வழியை பதிய வைத்திடு 
மூச்சு உள்ளவரை நினைவில் நிற்கும் !

கருத்துகள்