பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! மந்திரம் ! கவிஞர் இரா .இரவி !

பொதிகை மின்னல் மாத இதழ் 
தந்த தலைப்பு !

மந்திரம் !  கவிஞர் இரா .இரவி !

கற்பிக்கப்பட்ட 
கற்பனை 
மந்திரம் !

சாமியார்களின் 
தந்திரமே 
மந்திரம் !


வழிவகுத்தது 
தனிக்குடித்தனத்திற்கு
தலையணை மந்திரம் !

பொருள் புரிந்தால் 
பிடிக்காது உங்களுக்கு 
மந்திரம் !

தன்னம்பிக்கை இருந்தால் 
உச்சரிக்க வேண்டாம் 
மந்திரம் !

புரியாத மொழியில் 
பூசிப்போரின் உளறல் 
மந்திரம் !

கடவுளுக்கும் 
கையூட்டா ?
மந்திரம் !

மாதா பிதாவை 
மதித்தால் வேண்டாம் 
மந்திரம் !

செம்மை மனது 
செபிக்கவேண்டாம் 
மந்திரம் ! 

மாங்காய் 
காய்க்காது 
மந்திரத்தால் !

கருத்துகள்