காந்தக் கண்ணழகி ! கவிஞர் இரா .இரவி !காந்தக் கண்ணழகி ! கவிஞர் இரா .இரவி !

பார்வைகளால் எப்போதும் தருகிறாள் பரவசம்
பாவை கவர்ந்தாள் உள்ளம் இல்லை என்வசம் !

பார்வைகளின் வழியே பாய்ச்சுகிறாள் மின்சாரம்
புத்துணர்வு பெறுகின்றது எந்தன் எண்ணம் !

அசந்தா ஓவியம் உயிர் பெற்று விட்டதோ ?
அனார்கலி பார்க்காதவர்கள் பாருங்கள் இவளை !

விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்த தேவதை
வஞ்சியின் விழிகள் செய்கின்றன என்னை வதை !

அள்ள அள்ள அன்னம் வரும் அட்சயப்பாத்திரம்
அழகி இவளை பார்க்க பார்க்க வரும் பரவசம் !

நடந்து வரும் நந்தவனம் நங்கை இவள்
நடமாடும் நயாகரா நீர்விழ்ச்சி இவள் !

இரும்பை உடன் இழுத்திடும் காந்தம்
என்னை இழுக்கிறாள் காந்தக் கண்ணழகி !

கருத்துகள்