முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கவிஞர் இரா. இரவி



முத்தமிழ் அறிஞர் கலைஞர்!

கவிஞர் இரா. இரவி
கவியரங்குகளில் கைதட்டுகள் பெற்று உயர்ந்தவர்
கற்கண்டு கவிதைகளால் உள்ளம் கவர்ந்தவர்!

திட்டமிட்டு உழைத்து வாழ்வில் உச்சம் அடைந்தவர்
திட்டங்கள் பல தீட்டி மக்கள் மனங்களில் வாழ்பவர்!

தமிழகத்தின் வரலாற்றில் தனி இடம் பிடித்தவர்
தரணி முழுவதும் தமிழின் பெருமையை பறைசாற்றியவர்!

படைப்புகளில் போராட்டம் விதைத்து வளர்த்தவர்
போராளியாகவே இறுதி பயணத்திலும் வென்றவர்!

ஆசைப்பட்டபடியே அறிஞர் அண்ணாவின் அருகில்
அழகாக அமைந்தது கல்லறை மெரினாவில்!

பகைவர்களும் பாரட்டும் பண்பாளர் கலைஞர்
படைநடத்தி வீரநடையிட்டு வெற்றிகள் பெற்றவர்!

அழைத்து வரவில்லை இழுத்து வந்தார்கள் என்று
அழகுதமிழில் மனோகரா வசனம் வடித்தவர்!

ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓடி ஓடி உழைத்தவர்
ஓய்வு தற்கொலைக்குச்சமம்  உணர்ந்தவர்! 
                                                   

பேச்சுத்துறை, எழுத்துத்துறை என இருவேறு துறையிலும்
புரட்சிகள் புரிந்து கழகத்தைக் கட்டிக் காத்தவர்!

பெரியாரின் கொள்கைகளை பெருமளவு நிறைவேற்றியவர்
பேரறிஞர் அண்ணா வழியில் பீடு நடையிட்டு வென்றார்!

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் அறநிலையத்துறையில்
காலத்தால் அழியாத பல நற்பணிகளை நிறைவேற்றி
யவர் !

மீன்வளத்துறை அமைச்சரை சுருக்கமாக பேசுக என்பதை
மீன் குட்டிமீன் ஐயரை மீன் போல பேசுக என்றவ
ர்!

கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாவேன் என்றார் 
கடற்கரையில் சந்தனப் பெட்டியில் உறங்குகின்றா
ர் !

சென்னையின் சுற்றுலா தலங்களில் ஒன்றானது மெரினா
சென்னை செல்வோரெல்லாம் காண்கின்றனர் நினைவிடத்தை!

குறைஇல்லாத மனிதன் இல்லை உலகில்
குறை குறைவாகவும் நிறை நிறைவாகவும் உள்ளவன் நீ!

சமூக நீதியில் என்றும் வாழ்கிறாய் நீ
சமூகம் போற்றிட பாராட்டிட வாழ்கிறாய் என்றும்!

கருத்துகள்