ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !








.ஹைக்கூ  !  கவிஞர் இரா .இரவி !


உணர்த்தியது 
அழித்தால் அழிப்பேன் 
இயற்கை !

உணர்த்தியது 
சிதைத்தால் சிதைப்பேன் 
இயற்கை !

வணிகருக்கு வரும் இலாபம் 
வருவதில்லை 
உழவருக்கு !

சிதைத்து வருகிறான் 
சிங்களன் 
மீனவர் வாழ்வை !

முடிவெடுத்த நாளில் 
பண்டிகை கொண்டாடுங்கள்
ஏமாறும் குழந்தைகள் !

கருத்துக்கணிப்பு 
என்ற பெயரில் 
கருத்துத்திணிப்பு !

பார்க்கின்றனர் சோதிடம் 
கோடித்திருடர்களை 
சிறைபிடிக்க !

வருந்தாதே இன்னலுக்கு 
வரும் இன்பம் 
இதுவும் கடந்து போகும் !

இரவு பகலாகும் 
இன்னல் தீரும் 
நம்புக நடக்கும் !

வலைகட்டி காத்திருந்தது 
பூச்சிக்காக 
சிலந்தி !

கொள்ளையர்கள் தப்புகின்றனர் 
வாகன ஓட்டிகள் மாட்டுகின்றனர்
காவலரிடம் !

இறங்குவதே இல்லை 
ஒருவழிப்பாதை 
விலையேற்றம் !

விரும்பினால் போதாது 
செய்க 
அறம் !

அசைவமாகும் 
ஆடு 
சைவம் !

ஆறுகளில்  வெள்ளம் 
வருத்தத்தில் 
மணல் கொள்ளையர்கள் !

பொம்மை உடைந்தது 
உடைந்தது 
குழந்தையின் மனம்  !

இரண்டுமே 
கற்பிதம் 
கடவுள் பேய் !

சொட்டுத் தண்ணீர் மறுத்தோரின் 
கொட்டம் அடக்கியது 
இயற்கை !

தீங்கு செய்தாருக்கும் 
நன்மை செய்திடும் 
தமிழர்கள் !

உதவியது கேரளத்திற்கு 
பேருள்ளம் 
சிறுமிக்கு !

மதுரையின் மாண்பு 
கேரளத்தில் ஒளிர்ந்தது 
வாழ்க ஆட்சித்தலைவர் !

தேநீர் தேசம் 
கண்ணீர் தேசமானது 
இயற்கையின் சீற்றம் !

ஆட்டமிடும்   மனிதா 
இனியாவது உணர் 
இயற்கையே பெரிது !

உதவிடும் உள்ளங்களில் 
வாழ்கிறார் 
அன்னை தெரசா !

மத சாதி இனம் மொழி 
வேறுபாடு தகர்த்தது 
மனிதநேயம் !
 

கருத்துகள்