படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
என்னுயிர் அம்மா!
த.ரா. கணேசன்,
காவல் உதவி ஆய்வாளர் மதுரை.
உன்னில் என்னைக் கண்டேன்!
உன்னால் இங்கு வந்தேன்!
உன்னால் இங்கு வந்தேன்!
உயிரும் உறவும் தந்தவள் நீ!
உதிரம் சிந்தி காத்தவள் நீ!
உதிரம் சிந்தி காத்தவள் நீ!
என்னை செதுக்கி வைத்து விட்டு
எங்கே போய் மறைந்தாய் நீ!
எங்கே போய் மறைந்தாய் நீ!
உளியும் ; சிற்பமும் இங்கே வைத்த
உன்னத உயிர் நீ எங்கே!
உன்னத உயிர் நீ எங்கே!
பிரிவு என்பது கொடிய தென்று!
இழந்த பின்பு தெரிய வைத்தாய்!
இழந்த பின்பு தெரிய வைத்தாய்!
வலியும், வேதனையும் தந்து விட்டு
வந்த இடம் சென்றாயோ!
வந்த இடம் சென்றாயோ!
உலகில் பலமுகம் பார்த்தாலும்
உன்முகம் இங்கு இல்லையே!
உன்முகம் இங்கு இல்லையே!
கோடிகள் பல கிடைத்தாலும்
அது தாயின் மடி ஆயிடுமா!
அது தாயின் மடி ஆயிடுமா!
ஆயிரம் உறவுகள் வந்தாலும்
அன்னையின் உறவுக்கு கீழே தான்!
அன்னையின் உறவுக்கு கீழே தான்!
காசு பணம் போய் விட்டால்
எல்லா உறவும் நீங்கி விடும்!
எல்லா உறவும் நீங்கி விடும்!
உலகில் உள்ள உயிர்களில்
உன்னதமான உறவு நீ!
உன்னதமான உறவு நீ!
தாயின் முகம் காணாத
வாழ்க்கையும் ஒரு பாவம் தான்!
வாழ்க்கையும் ஒரு பாவம் தான்!
தவிக்க விட்டு சென்று விட்டாய்
தரணியில் நானும் தேடுகிறேன்!
தரணியில் நானும் தேடுகிறேன்!
ஏழுமுகம் உண்டென்று! கேட்டதுண்டு!
உன்முகம் எங்கே ? தேடுகிறேன்!
உன்முகம் எங்கே ? தேடுகிறேன்!
மண்ணைவிட்டு போகும் வரை
உன் உயிர் எங்கே என்னுயிர் தேடும்!
உன் உயிர் எங்கே என்னுயிர் தேடும்!
காலங்கள் கடந்து சென்றாலும்
உன் நினைவுகள் என்றும் நீங்காது!
உன் நினைவுகள் என்றும் நீங்காது!
காலத்தை வென்றவள் என்றால்
அது தாயின் அன்பு ஒன்று மட்டுமே!
அது தாயின் அன்பு ஒன்று மட்டுமே!
கருத்துகள்
கருத்துரையிடுக