மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத்தென்னவன் தந்த தலைப்பு! “தமிழ்நாடு ஐம்பது தான் தமிழ்மொழிக்கு ? ” கவிஞர் இரா. இரவி
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
கவிமாமணி சி. வீரபாண்டியத்தென்னவன் தந்த தலைப்பு!
“தமிழ்நாடு ஐம்பது தான் தமிழ்மொழிக்கு ? ”
கவிஞர் இரா. இரவி
எல்லா மொழிக்கும் வரலாறு சிலநூறு ஆண்டுகள்
எம் தமிழ்மொழிக்கு வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள்!
எப்போது பிறந்தது என்பது யாருக்கும் தெரியாது
எப்போதோ பிறந்தது இன்றும் நிலைத்து உள்ளது!
உலகம் தோன்றிய போதே தோன்றிய மொழி
உலகம் முழுவதும் பேசப்படும் ஒப்பற்ற மொழி!
முதல் மனிதன் மொழிந்திட்ட முதல் மொழி
மூத்த மொழி என்பதை அறிஞர்கள் ஏற்ற மொழி!
உலகப்பொதுமறை உலகிற்கு வழங்கிய மொழி
உலகின் பன்னாடுகளின் ஆட்சிமொழி நம் மொழி!
மண் தோன்றும் காலம் முன்பே தோன்றிய மொழி
மண்ணில் சிறந்து விளங்கிடும் சீரான மொழி!
காப்பியங்கள் காவியங்கள் நிறைந்த மொழி
கவிதைகள் கட்டுரைகள் நிறைந்த மொழி!
பக்தி இலக்கியத்திற்கு பஞ்சமில்லாத மொழி
பகுத்தறிவு இலக்கியமும் பெற்றுள்ள மொழி!
பார் போற்றும் பரவசம் தந்திடும் மொழி
பண்பாட்டைப் பறைசாற்றிடும் பைந்தமிழ் மொழி !
இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தின் மொழி
இலக்கியங்கள் எண்ணிலடங்காதவை கொண்ட மொழி!
இயல், இசை, நாடகமென முத்தமிழ் உள்ள மொழி!
இனிமையில் தேனையும் மிஞ்சிய உயர்மொழி!
உயர்தனிச் செம்மொழி என்ற சிறப்பு மிக்க மொழி
உண்மையில் காலத்தால் அழியாத அதிசய மொழி!
சங்கம் வைத்து வளர்த்திட்ட பெருமைமிக்க மொழி
சரிசமமாக உலகில் எந்தமொழியும் இல்லவே இல்லை!
மொழி ஆய்வாளர்கள் அறிவித்த முதல்மொழி
மொழிகளுக்கு எல்லாம் தாயான தாய்மொழி!
தமிழ்ச்சொற்கள் இல்லாத பிறமொழி இல்லை உலகில்
தமிழே சொற்களின் களஞ்சியம் பெட்டகம் !
வரலாற்று சிறப்புமிக்க வளமை மிக்க மொழி
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் தமிழ் வாழ்க என்றே!
கருத்துகள்
கருத்துரையிடுக