ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
அள்ளித்தராமல் கிள்ளித்தந்து
தட்டி விடுகின்றனர்
பிறர் தருவதையும் !
தானும் தராமல்
பிறர் தருவதைத் தடுப்பது
நீதியன்று !
உணருங்கள்
வீரியத்தை விட
காரியம் முக்கியம் !
இறந்தபின்னே
சாம்பலுக்குத் தரும் மதிப்பை
இருக்கும்போது தந்திருக்கலாம் !
விலைவாசி விண்முட்ட
வேதனையில்
ஏழைகள் !
பார்த்தது கூட இல்லை
கோடிப்பணம்
நேர்மையாளர்கள் !
திராவகத்தை விட
கொடியது
வன்சொல் !
தண்டத்தொகை செலுத்தி
குறைந்தபட்ச இருப்புத்தொகையில்
நடக்கின்றது குடும்பம் !
உதவிட மறுக்கையில்
கிழிந்து விடுகிறது
பெரியமனிதர் முகத்திரை !
அளவு குறைய
பயண நேரம் கூடுகிறது
விமானம் !
கண்ணுக்குத் தெரிவதில்லை
சுற்றுவது உண்மை
உலகம் !
வட்ட நிலா
கிட்டே சென்றால்
கரடு முரடு !
கட்சி மாறுவது
அணி மாறுவது
அரசியலில் சாதாரணம் !
அளிக்காமல் அழிக்கின்றனர்
தேர்தலில்
வாக்கை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
அள்ளித்தராமல் கிள்ளித்தந்து
தட்டி விடுகின்றனர்
பிறர் தருவதையும் !
தானும் தராமல்
பிறர் தருவதைத் தடுப்பது
நீதியன்று !
உணருங்கள்
வீரியத்தை விட
காரியம் முக்கியம் !
இறந்தபின்னே
சாம்பலுக்குத் தரும் மதிப்பை
இருக்கும்போது தந்திருக்கலாம் !
விலைவாசி விண்முட்ட
வேதனையில்
ஏழைகள் !
பார்த்தது கூட இல்லை
கோடிப்பணம்
நேர்மையாளர்கள் !
திராவகத்தை விட
கொடியது
வன்சொல் !
தண்டத்தொகை செலுத்தி
குறைந்தபட்ச இருப்புத்தொகையில்
நடக்கின்றது குடும்பம் !
உதவிட மறுக்கையில்
கிழிந்து விடுகிறது
பெரியமனிதர் முகத்திரை !
அளவு குறைய
பயண நேரம் கூடுகிறது
விமானம் !
கண்ணுக்குத் தெரிவதில்லை
சுற்றுவது உண்மை
உலகம் !
வட்ட நிலா
கிட்டே சென்றால்
கரடு முரடு !
கட்சி மாறுவது
அணி மாறுவது
அரசியலில் சாதாரணம் !
அளிக்காமல் அழிக்கின்றனர்
தேர்தலில்
வாக்கை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/kavignar-eraravi
கருத்துகள்
கருத்துரையிடுக