படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! இயற்கை ! கவிஞர் த.ரா .கணேசன் காவல் உதவி ஆய்வாளர் !படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இயற்கை !

கவிஞர் த.ரா .கணேசன் காவல் உதவி ஆய்வாளர் !

கோடையில  மழை இல்ல 
ஊர் சனம் காயுது !

காவிரியில தண்ணி வந்து
கரை புரண்டு ஓடுது !

வந்த தண்ணிர் வயலுகில்ல
விவசாயி மனம் ஏங்குது !

அத்தனையும் வம்பாய் போய்
கடலில்தான் கலக்குது !

தண்ணீர் தராக் கேரளமும்
கண்ணீரில் மிதக்குது !

தண்ணீர் கேட்டு நின்றவரிடம்
குடிக்க தண்ணீர் கேட்டு நிக்குது !

இயற்கைக்குச் சொந்தம்
இங்கே யாருமில்லை !

இதை தெரிஞ்சுக்கிட்டா  நம்மில்
உயர்வு தாழ்வு இல்லை ! 

கருத்துகள்