பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! தேடல் ! கவிஞர் இரா .இரவி !



பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !

தேடல் ! கவிஞர் இரா .இரவி !


விடைதரும் 
இணையத்தில் 
தேடல் ! 

சாதனைக்கான 
சாதனம் 
தேடல் ! 

அறிவியல் வளர்ச்சி 
அறிவியலாளர்களின் 
தேடல் ! 

எந்த வயதிலும் 
நடக்கட்டும் 
தேடல் ! 

நாளைய விளைச்சலுக்கு 
இன்றைய விதைப்பு 
தேடல் ! 
தினமும் 
கடமையாகட்டும்
தேடல் ! 

தொலைந்தவைகள் கிட்டும்
தொடருங்கள் 
தேடல் ! 

கண்டுபிடிப்புகள் 
கண்டுபிடிக்கக் காரணம் 
தேடல் ! 

பெற்றுத்தரும் 
வெற்றி 
தேடல் ! 

வழி கிடைக்கும் 
ஒளி பிறக்கும் 
தேடல் ! 







நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்