ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
தீ வையுங்கள்
தீண்டாமை எண்ணத்திற்கு
மாறுங்கள் மனிதனாக !
உண்மையிலும் உண்மை
உலகம் உருண்டை புலனத்தில்
நாம் அனுப்பியது நமக்கே !
அரைத்த மாவையே
அரைத்து வருகின்றனர்
புலனத்தில் !
சலிப்பு வருகின்றது
படித்ததையே படிக்கையில்
புலனம் !
உயிரோடு உள்ளவர்களையும்
சாகடித்து விடுகின்றனர்
புலனம் !
அழிக்கின்றனர்
படிக்காமல் பார்க்காமல்
புலனம் !
பேரிடர் ஒத்திகையில்
பேரிடர்
மாணவி பலி !
வாடா என்று அழைப்பதில்லை
வாங்க என்கிறேன் மகனை
பெயர் பிரபாகரன் !
படித்ததும் சிலர்
கவனமாகின்றனர்
கண்காணிப்பு கருவி உள்ளது !
வாங்கிய விலை
குறைத்துச் சொன்னாலும்
திட்டும் மனைவி !
பின்னோட்டக் கவலையின்றி
பதிந்து கொண்டே இருங்கள்
முகநூலில் படிப்பார்கள் !
வென்றது
பெண்ணுரிமை
சபரிமலை !
வம்பு மறந்து
அன்பு செலுத்துங்கள்
நிகழும் மாற்றம் !
கோபத்தின்
முடிவுரை
இழப்பு !
யாருமில்லை
பிறப்பால்
தீயோர் !
ஏமாற வேண்டாம்
உண்மை இல்லை
ஆடித்தள்ளுபடி !
வேண்டவே வேண்டாம்
சோகத்தில் வீழ்த்தும் வலை
கவலை !
ஆயிரங்களுக்கு கெடுபிடி
கோடிகளுக்கு டாட்டா
வங்கிக்கடன் !
நீண்ட யோசனை
பிடிக்கலாமா ? வேண்டாமா ?
கோடித்திருடர்களை !
சேர்ந்தே இருப்பவை
பிரிக்க முடியாதவை
அரசியல் ஊழல் !
வரிவிலக்கு என்று வாங்கி
வீட்டில் விலக்காகின்றனர்
மது !
வங்கிகளின் கொள்ளை ஏழைகளிடம்
குறைந்தபட்ச இருப்புத் தொகை
அபராதம் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக