ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


குழந்தைகளில் சில
ஆள் வளருகின்றன 
அறிவு வளரவில்லை !

உணரவில்லை மக்கள் 
புற்றுநோய் வந்தபோதும் 
நெகிழியின் தீங்கு !

சோதனையின் முடிவு 
கசந்தது 
இனிப்பு நோய் !

வெள்ளைக்காரன் தந்த 
வெள்ளை நஞ்சு 
சர்க்கரை ( சீனி )

பெரிய மனிதர்களையும் 
மிகச்சிறியோராக்கும் 
சினம் !

இருப்பிடம் 
இதயமன்று மூளை
மனம் !

இதயமாற்று 
சிகிச்சைக்குப் பின்னும் 
நினைவில் அவள் !

கனிய வைக்கின்றனர் 
ரசாயனத்தால் 
கனிகளை! 

மனிதனுக்கு 
அழகு 
மனிதநேயம் !

இல்லை வடிவம் 
இல்லாவிடில் தொல்லை 
அன்பு !

தகுதியற்றது என்றார்கள் 
தகுதியாக்குவோம் நாம் 
பெண்கள் வாழ !

வேரோடு பெயர்த்து நடுங்கள் 
வெட்டாதீர் 
மரங்களை !

முறையிடுவது யாரிடம் 
காணவில்லை 
கடவுள்களை !

எட்டுப் போடாவிட்டால் 
உரிமை இல்லை அங்கு 
எட்டைப்பற்றிப்பேசினால் சிறை !

உச்சநீதிமன்றம் 
நெத்தியடி  
ஆளுநர்களுக்கு !

கருத்துகள்