மழை இரவு ! கவிஞர் இரா .இரவி !
வெளியில் செல்ல முடியவில்லை ஆனால்
வழிந்த மழைத் துளிகளை ரசித்து மகிழ்ந்தேன் !
வானில் இருந்து வரும் மழைத்துளிகள்
வளம் செழிக்க பயிர் வளர உதவுகின்றன !
மழை பொய்த்தால் வறட்சி வரும்
மழை பெய்தால் பூமி குளிரும் !
கடலில் இருந்து ஆவியாகப் பறந்து
கடினப் பயணம் செய்து வானம் சென்று !
புறப்பட்ட பூமிக்கே வந்து விழுகின்றது
புத்துணர்வு தருகின்றது பூமிப்பந்துக்கு !
நானும் அவளும் ஒரு நாள் ஒரு குடையில்
நல்ல மழையில் நனைந்து வந்தோம் !
பசுமரத்து ஆணியாகப் பதிந்த நினைவை
பெய்த மழை நினைவூட்டி மகிழ்வித்தது !
இரவு மழையை வணிகர்கள் வாழ்த்துவார்கள்
இரவில் வணிகம் செய்வதில்லை என்பதால் !
உழவனும் இரவு மழையையே விரும்புவான்
உழவை பகலில் செய்திட வாய்ப்பாக இருக்கும் !
இரவு மழை இதம் தரும் இனிமை தரும்
இன்னல் மறந்து இன்புற உதவிடும் !
கருத்துகள்
கருத்துரையிடுக