ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
கடன் கொடுத்தார்
நெஞ்சம் போல் கலங்கினான்
இலங்கைவேந்தன் !
சீதை இருக்குமிடம்
இராமனுக்கு அயோத்தி
வீட்டோடு மருமகன் !
உதட்டிலே உறவு
நெஞ்சிலே பகை
அரசியல் கூட்டணி !
உப்பில்லாப் பண்டம்
குப்பையில் அல்ல தட்டில்
பத்தியம் !
ஓசை வந்தது
ஒரு கையால் தட்டி
தட்டுகின்றனர் மேசையில் !
தூக்கத்துடன்
வாகனம் ஓட்டினால்
நிரந்தரமாகும் தூக்கம் !
நடந்து விடுகிறது
இமைக்கும் நொடியில்
விபத்து !
வந்ததும் காக்க
ஒழுங்காகிறது வாழ்க்கை
பிம்பம் !
பழுது நீக்கையில்
அழிந்து விடுகிறது
அலைபேசியில் எண்கள் !
அஞ்சுவதில்லை
கறைகளுக்கு
கறைவேட்டிகள் !
பொன் முட்டைவாத்தானது
சத்துணவுத்திட்டம்
ஊழல்வாதிகளுக்கு !
ஆண்களையும் மிஞ்சி விடுகின்றனர்
சில பெண்கள்
ஊழல் புரிவதில் !
ஓட்டைக்கு கப்பலுக்கு
ஒன்பது மாலுமிகள்
அதிகபட்ச அமைச்சர்கள் !
இறக்காமல் வாழ்கின்றனர்
பிறருக்காக வாழ்ந்தவர்கள்
மக்கள் மனங்களில் !
காணாமல் போகின்றனர்
கால வெள்ளத்தில்
தன்னலவாதிகள் !
நிலையற்ற உலகில்
என்றும் நிரந்தரமானது
அன்பு !
பெரிய மனிதர்களின்
சின்னப்புத்தி
சபலம் !
உலகம் மட்டுமல்ல
மனிதனும்தான்
நீராலானவன் !
வாழ்வு தேடுகின்றனர்
குறுக்கு வழியில்
அரசியல்வாதிகள் !
கவனம் பக்தர்களே
கடவுள் சிலையிலும்
வந்தன போலி !
சாமியார்கள் மட்டுமல்ல
சாமியும்
போலியானது !
ஆற்றில் எடுத்தாலும்
அளந்து எடுங்கள்
மணலை !
அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்
முதியோர் இல்லத்தில் !
ஆசையால் சிறை
உணரவில்லை
அரிசியல்வாதிகள் !
கருத்துகள்
கருத்துரையிடுக