ஒருமுறையேனும்! கவிஞர் இரா. இரவி !

ஒருமுறையேனும்!

கவிஞர் இரா. இரவி !



ஒருமுறையேனும் இலங்கை இராணுவத்தை நமது
இந்திய இராணுவம் சுடவேண்டும் என் ஆசை இது!



மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலையை அறுக்கிறான்
மீனவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி வருகிறான்!



துப்பாக்கியால் காக்கா குருவியென சுடுகிறான்
தலைகளைக் கண்டாலே தாவி ந்து தாக்குகிறான்!



உயிரோடு திரும்பி வருவது மீனவர்களுக்கு
உத்திரவாதம் இல்லாமல் போனது இலங்கையால் !



தானம் தந்த கச்சத்தீவில் ஆதிக்கம் செய்கிறான்
தத்தளிக்க விட்டு கொடூரமாக ரசித்து மகிழ்கிறான்!



படகுகளைப் பறித்துக் கொண்டு விரட்டுகின்றான்
பரிதவிக்க  விடுகிறான் பாவப்பட்ட மீனவர்களை!



கடலுக்குள் ஏதடா எல்லை புரியவில்லை இலங்கைக்கு


காற்று அடித்தால் கடந்து விடும் படகு அறியவில்லை!



எல்லை தாண்டி வந்து பயங்கரவாதம் புரிகிறான்
எல்லை மீறிய அடாவடித்தனம் செய்து வருகிறான்!



தட்டிக் கேட்க யாருமில்லை இறுமாப்பு கொள்கிறான்
தடியடியாவது நடத்துங்கள் இலங்கை இராணுவத்தை!



தமிழக மீனவனும் இந்தியன்தான் உணருங்கள்
தமிழனைக் காக்க இராணுவத்தை அனுப்புங்கள்!



தமிழக மீனவன் மீது கை வைத்தால் இந்திய இராணுவம்
தட்டிக் கேட்கும் என்ற பயத்தைக் காட்டுங்கள்!



உலகமகா ரவுடியாக வலம் வரும் கொடூரன்
இலங்கை இராணுவத்திற்கு பாடம் புகட்டுங்கள்!



என் ஆசை என்றும் நிறைவேறாது தெரியும்
ஒருமுறையேனும் இலங்கை இராணுவத்தைச் சுடுங்கள்!

கருத்துகள்