தமிழ்ச்சங்கம்! கவிஞர் இரா. இரவி



தமிழ்ச்சங்கம்!

கவிஞர் இராஇரவி

கர்னாடக மண்ணில் ஒரு தமிழ்ச்சங்கம்
கண்டவர் பாராட்டும் அரிய பணி அதன் அங்கம்!

மாதாமாதம் நடக்குது அங்கே கவியரங்கம்
மட்டற்ற கவிஞர்களின் கவிதை அரங்கேற்றம்!

தமிழறிஞர்களை அழைத்து பாராட்டி மகிழ்கின்றனர்
தமிழை ரசிக்க பெருங்கூட்டம் அங்குண்டு!

தமிழக அரசு விருது வழங்கிப் பாராட்டியது
தமிழர்களின் அரணாக விளங்கி வருகின்றது!

தமிழ்ப்பள்ளிகளும் நடத்தி வருகின்றது
தமிழ் வளர்ந்திட தமிழ்ப்பணி செய்கின்றது!

கருத்தரங்கம் நடத்தி தமிழை விதைத்து வருகின்றது
கர்னாடகத்தின் பெருமைகளில் ஒன்றாகி விட்டது!

பசுமை நகராம் பெங்களூரில் சங்கம் உள்ளது
பசுமை காக்கும் அல்சூர் ஏரியின் எதிரில் உள்ளது!

அண்ணாசாமி முதலியார் வீதியில் உள்ளது
அழகிய தமிழை நாளும் வளர்த்து வருகிறது!

தமிழ்ச்சங்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது
தமிழை கன்னடர்களுக்கும் கற்பித்து வருகிறது!

தமிழர் திருநாளில் கவிதைத் தொகுப்பும் தருகிறது
திருவள்ளுவர் திருநாளில் பேரணியும் நடத்துகிறது!

தமிழறிஞர்கள் தங்கிட ஓய்வறைகளும் தருகிறது
தமிழர்களுக்கு நோய் நீங்கிட மருந்தும் தருகின்றது!

தற்காப்புக் கலைகளை கற்பித்து வருகிறது
தமிழ்த் திருமணங்களையும் நடத்தி வருகிறது!  
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்