துபாயில் தமிழ் கவிதை நூல் வெளியீடு





துபாயில் தமிழ் கவிதை நூல் வெளியீடு

துபாய் : துபாயில் தமிழக கவிஞர் இரா. இரவி எழுதிய ’உள்ளத்தில் ஹைக்கூ’ என்ற தமிழ் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 24.05.2018 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மதுரை நத்தம் ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் மதுரை விமான நிலையத்தில்  உதவி சுற்றுலா  அலுவலராக பணிபுரிந்து வரும் இரா.இரவி அவர்கள் தனது ஆர்வத்தின் காரணமாக பல்வேறு நூல்களை எழுதி வருகிறார். அதில் உள்ளத்தில் ஹைக்கூ என்ற கவிதை நூல் மிகவும் எளிமையாக இருந்து வருகிறது. இந்த நூல் அனைத்து தரப்பினரையும் ஆர்வத்துடன் படிக்க ஆர்வமூட்டக்கூடியது. கவிஞர் இதுபோல் இன்னும் பல நூல்களை எழுதி தமிழ் சமுதாயத்திற்கு சேவை ஆற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜாஹிர் உசேன் நூலை வெளியிட திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஹபிபுல்லா பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி பைசுர் ரஹ்மான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன.

கருத்துகள்